என்னை கவனிப்பவர்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2018

வந்துட்டேன்னு சொல்லு! ஒரு புதிரோட வந்துட்டேன்னு சொல்லு!


 ஹலோ! என்னை ஞாபகம் இருக்கா  நீ------------------------------ ண்ட இடைவெளிக்குப்  பிறகு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

அட நம்ம அரசியல்வாதிகள்தான்  உங்கள குழப்பணுமா என்ன?  நானும்  ஒரு புதிர் போட்டு உங்களை குழப்பலாம்னு நினைக்கிறேன்.

        ஒரு 20 கி.மீ  சாலையில ஒரு முனையில் காதலனும்  இன்னொரு முனையில் காதலியும் ஒருவரை ஒருவர் சந்திக்க  சைக்கிள்ள ஒரே நேரத்தில கிளம்பறாங்க! ரெண்டு பெரும்  சரியா  10 கிமீ வேகத்திலதான்  சைக்கிள் ஒட்டாறாங்க.  காதலி வளக்கிற புறாவும் சைக்கிள் ஹான்டில் பார்ல கூடவே கிளம்ப ரெடியா இருக்கு. ரெடி ஸ்டார்ட்டுன்னு ரெண்டு பேரும் அவங்க அவங்க இருந்த இடத்தில இருந்து கிளம்ப புறாவால சும்மா ஒக்கார முடியல. அது 15  கி.மீ வேகத்தில பறக்க ஆரம்பிச்சு வேகமா போய் காதலன் சைக்கிள்ள ஒக்காந்துட்டு உடனே திரும்பி அதே வேகத்தில் காதலி சைக்கிள தொட்டுட்டு திரும்பவும் காதலனை நோக்கி அதே வேகத்தில பறக்குது,. இப்படியே ரெண்டு பேரும் மீட் பண்றவரை பறந்துகிட்டே இருக்கு புறா . ஒருவழியா மீட் பண்ணிடறாங்க .  புறா அப்பாடான்னு பெருமூச்சு விடுது. மீட் பண்ணதும்  அவங்க ரெண்டும் பேரும் பேசிக்கிட்டிருக்க  சும்மா இருக்க போரடிக்கவே  நாம எவ்வளோ தூரம் பறந்திருப்போம்னு புறா கணக்கு போட்டு பாக்குது.அதனால் கண்டு பிடிக்க  முடியல நீங்கள் சொல்லுங்களேன் புறா மொத்தமா எவ்வளவு தூரம் பறந்திருக்கும்?



(கணக்கு புரியம்படி இல்லன்னா மட்டும் கேக்கணும்.மத்த குறுக்கு கேள்வில்லாம் கேக்கப் படாது )

இந்த கணக்கதான் ஒரு கணித மேதை கிட்ட ஒருத்தர் சொன்னாராம் ?
அந்தக் கணித மேதை  யாரு அவர் சரியா விடை  சொன்னாரான்னு அடுத்த பதிவில பாக்கலாம் 

விடை அறிய கிளிக் செய்க 

புதிருக்கான விடை

28 கருத்துகள்:

  1. ​புறாவுக்கு எதுக்கு இந்த வேலை...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார் .இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்று முன்னமே சொல்லி இருக்கேன். ஹிஹி

      நீக்கு
  2. நெடுநாள் கண்டதில் மகிழ்ச்சி. இருந்தாலும் புதிர் என்றால் நான் சற்று ஒதுங்கி விடுவேன். பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
  3. முரளிதரன் நீங்களும் புதிர் போட ஆரம்பித்து விட்டீர்களா?
    மூளை வேலை ஆச்சே!
    மீண்டும் வருகிறேன்.
    கணித மேதை சகுந்தலா அவர்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே பல புதிர்களை வெளியிட்டுள்ளேன். வருகைக்கு நன்றி மேடம்

      நீக்கு
  4. நம் தமிழக கல்வித்துறை நிறைய நல்ல மாற்றங்கள் நடந்து கொண்டு வருகின்றது என்ற செய்திகள் நிறைய என் காதுக்கு வந்து கொண்டிருக்கின்றது. உங்கள் பார்வை என்ன முரளி?

    பதிலளிநீக்கு
  5. இருங்க மூளையைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டு விடைக்காக....நமக்கும் கணக்குக்கும் கொஞ்சம் இல்லை நிறையவே தூரம்....எட்டாக்கனி...இருந்தாலும் முயற்சி....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வரும் போதை இப்படி வந்தா எப்படிங்க ஏதோ பார்த்து செய்யுங்க

    பதிலளிநீக்கு
  7. வந்துட்டேன்... வந்துட்டேன்...

    யோசிச்சிட்டு...

    பறந்திட்டு இருக்கேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி கில்லாடியாச்சே கண்டு பிடிச்சுடுவார். எப்படி இருக்கீங்க. வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. வணக்கம் ஐயா,
    நலந்தானே!
    அலைபேசியில் இருந்ததால் விளக்கமாக பதிலளிக்க இயலவில்லை.
    இரண்டு பேரும் புறப்பட்ட இடத்தில் இருந்து சரியாக ஒரு மணி நேர அளவில் ஒருவரை ஒருவர் சந்தித்திருப்பர்.

    எனில் புறாவும் ஒரு மணி நேரம் வரைதான் பறந்திருக்கும்.

    புறா ஒரு மணி நேரம் பறந்த தொலைவுதான் அது கடந்த தொலைவு.
    நீங்கள் சொல்லியுள்ளபடி அது மணிக்கு 15 கிலோமீட்டர். எனவே 15 கிலோமீட்டர் என்பது அது கடந்த தொலைவு.
    சரிதானே?
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. என்னடா வராத ஆள் வந்துட்டார்ன்னு ஆசையா ஒடி வந்த நம்மகிட்ட இருக்கிற மூளையும் இப்படி கசக்கி பிழிகிறார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம அரசியல் வாதிகளை வச்சு நீங்கள் அடிக்கிற பிரமாதமான லுட்டியில இதெல்லாம் எடுபடுமா?

      நீக்கு
  10. இது மூளைக்காரர்களுக்குதானே..... எனக்கு வேறவேலை இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. 15 km (In an hour lovers will cover 10 km and meet each other and in an hour the bird can cover 15 km).

    பதிலளிநீக்கு
  12. போயிட்டு அப்புறம் விடையை பார்க்க வரேன்!

    பதிலளிநீக்கு
  13. மீண்டும் வந்ததில் மகிழ்ச்சியே.

    சிறு சிறு இடைவெளி கொடுக்கலாம். நீண்ட இடைவெளி வேண்டாம் முரளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு மகிழ்சசியும் நன்றியும் ஐயா! இனி சீரான இடைவெளியில் எழுத உத்தேசித்துள்ளேன்

      நீக்கு
  14. கபாலி எப்ப வேணாலும் வரட்டும். மூங்கில் காற்று அப்ப்பப வீசிக்கிட்டு இருந்தாத்தான் எங்க உடம்புக்கு நல்லது! வந்ததுக்கு நன்றி வாழ்த்துகள்
    “இனி எப்பயாச்சும் என்றில்லாமல், அப்பப்ப எழுதிவிடுங்க” – இது உங்களோடு எனக்கும் சேர்த்துச் சொல்லிக்கொண்டது சரிதானே நண்பரே?
    ஆமா.. இந்தப் புறாக்கணக்கு நமக்குப் புடிபடாம பறந்துகிட்டே இருக்கே! சரி அடுத்த பதிவுல நீங்க சொல்றப்ப தெரிஞ்சுகிட்டாப் போச்சு! (நா இந்த ஆட்டைக்கு வர்லிங்கோ!) நாந்தான் முந்தியே சொல்லியிருக்கேன்ல? நாமஎல்லாம் பாரதி வாரிசுகள்னு இந்தக் கணக்கு பிணக்கு சுணக்கு ஆமணக்கும் சேர்த்துத்தான்!

    பதிலளிநீக்கு
  15. சிந்தனைக்கு விருந்து. விடை தெரிந்தபின் பார்த்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. இருங்க கூடவே பறந்திட்டு வந்து சொல்றேன் :)

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895