என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

உங்கள் படைப்புகளை மின்னூலாக்கலாம் சென்னை முகாமுக்கு வாருங்கள்

       

   எழுத்தாற்றல் தம்மிடம் இருக்கிறது என்று நம்பும் ஒவ்வொருவருக்கும் தங்கள் படைப்புகளை நூல்களாக்க வேண்டும் என்ற கனவு இருக்கும்.முன்பெல்லாம் என்னதான் திறமை இருந்தாலும் தங்கள் எழுத்துக்களை அச்சில் பார்ப்பது எளிதானதாக இருக்கவில்லை. பத்திரிகைகளுக்கு  படைப்புகளை அனுப்பி சோர்ந்து போய் தங்கள் எழுத்துத்  திறமை இருப்பதயே மறந்து போனவர் பலர்.
      இணையத்தின் ஆதிக்கம் தொடங்கியதும் அது பலரையும் தன வசப் படுத்திக் கொண்டது. தகவல் தொடர்பின் பரிமாணங்கள் விரிவடைந்தன. நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் நான் இருக்கிறேன் என்று கைகுலுக்கி அழைத்தது. படைப்புகளையும் எண்ணங்களையும்  இலவசமாக வெளிப்படுத்த வாய்ப்பு அளித்தன. அச்சுப் பத்திரிகைகள் அளிக்கத் ்தவறிய வாய்ப்பை  இணையம் வழங்கியது.  கதை கவிதை கட்டுரை அரசியல் , நகைச்சுவை என விரும்பிய வண்ணம் தங்கள் படைப்புகளை வெளியிட்டு மகிழ்ந்தனர். வலைப்பூகள், முகநூல், டுவிட்டர் என அவரவர்க்கு ஏற்ற களங்களில் தங்கள் எண்ணங்களை பல்வேறு  வடிவங்களில் கொட்டித்   தீர்த்தனர். ஒரு சிலர்தான்  எழுத்தாளராக ்முடியும் என்ற நிலை மாறி படைப்பாளிகளின் எண்ணிக்கை   எண்ண முடியாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டிருகிறது      பத்திரிகையில்  மட்டுமே எழுதிய பிரபலங்களும்  இணையத்திலும்  இயங்கவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகினர். ஆனாலும் அச்சு வடிவில் தங்கள் படைப்பைக் காண வேண்டும் என்ற ஆவல் காரணமாக பலரும் இணையத்தில் எழுதிய படைப்புகளை நூலாக வெளியிட்டு  மகிழ்ந்தனர்.

    காலத்தின் கட்டாயம் அச்சு நூல்களுக்கு இன்னொரு வடிவமாக     மின்னூல்  உருப் பெற்றது .   ஒரு  அறை முழுதும் நிரப்பக் கூடிய நூல்கள் கையடக்கக் கருவியில்  அடங்கி விடக் கூடிய நிலை உருவானது.   இணையத்தில் இலவசமாகவும் விலைக்கும்    ஏராளமான மின்னூல்கள் கிடைக்கின்றன. மின்னூல் படிப்பதர்கேன்றே கிண்டில் ரீடர் போன்ற சாதனங்களும் வந்துவிட்டன.

  இத்தகைய சூழலில் மின்னூல், படைப்பாளிகள் மற்றும்   வாசகர்கள் தவிர்க்க   இயலாத ஒன்றாக ஆகிவிட்டது .பொழுது போக்குக்காக எழுதி வருவோரும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கி இலவசமாகவோ விலைக்கோ வழங்குவதற்கான வாய்ப்புகள் விரவிக் கிடக்கின்றன 

  இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் தங்கள் படைப்புகளை மின்னூலாக்கிப் பார்க்கும் ஆசை இருக்கக் கூடும் . கொஞ்சம் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் தங்கள் படைப்புகளை தாங்களாகவே மின்னூலாக்க முடியும் என்றாலும் தொழில் முறையிலான மின்னூல் தரமும் வடிவமைப்பும் படிப்போரைக் கவர்வதாக இருக்கும். 
அத்தகைய ஒரு வாய்ப்பை புஸ்தகா  டிஜிடல்    மீடியா  http://www.pustaka.co.in/  ஏற்படுத்திக் கொடுக்க   முன் வந்துள்ளது.

   சமீபத்தில் புதுக்கோட்டையில் கவிஞர் முத்து நிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பில் வெற்றிகரமாக மின்னூல் ஆக்க முகாம் நடை பெற்றதை  அறிந்திருப்போம்.  ஏற்கனவே பல அருமையான நூல்களை எழுதியவரான கவிஞர் முத்துநிலவன் அவர்கள் தன்படைப்புகளையும் மின்னூலாக்கி கணித் தமிழ் வளர்ச்சியில் தன்பங்கை முன்னிறுத்தினார் . மேலும் பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் ,வலைப் பதிவர்கள் தங்கள் படைப்புகளை மின்னூலாக்குவதற்கான ஒப்பந்தம்  பெறப்பட்டது.
     பல்வேறு படைப்பாளிகளின்  வேடந்தாங்கலான  சென்னையிலும் இத்ததகைய மின்னூலாக்க முகாம் நடத்த சென்னையில் உள்ளவர்கள் கூட காட்டாத ஆர்வத்தைக் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் காட்டி அதற்கான ஏற்பாடுகளில் உறுதுணையாய் நிற்கிறார்.அதற்கு அவருக்கு நன்றி  கூற கடமைப் பட்டிருக்கிறோம். நல்லதோர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் 

சென்னையில்   சிறப்பான மின்னூலாக்க முகாம் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது   
 முகாம் நடை பெறும்   இடம் 

ஹோட்டல் ராஜ் பேலஸ் 
12/1 தணிகாசலம் சாலை ,
தி நகர் 
சென்னை 17 

நேரம் : 6.00 PM- 8.30 PM
நாள் ;   25.02.2017

ஆர்வம் உள்ளோர் இம் முகாமில்   கலந்து  கொண்டு தங்கள் படைப்புகளை  மின்நூலாக்கி  உலகெங்கும் உலவச் செய்யலாம். 
              ஏற்கனவே நூல் வெளியிட்டிருப்போர் தங்கள் நூலின் ஒரு பிரதியும் தனது புகைப்படமும் கொண்டு வந்தால் போதுமானது  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . வலைப்பூக்கள், முகநூல் போன்றவற்றில்  எழுதியவர்களும்ட   விரும்பினால்  தங்கள் படைப்புகளின்   மென்பிரதி    மூலம்   மின்னூலாக்கிக் கொள்ளலாம்   . 

மேலும் விவரங்களுக்கு 


கவிஞர் முத்து நிலவன் அவர்களை தொடர்பு கொள்ளவும் 

கைபேசி எண் 9443193293


மின்னஞ்சல் muthunilavanpdk@gmail.com

இத்தகவலை எழுத்தாளர்களுக்கும்  நண்பர்களுக்கும்  தெரிவித்து பயன் பெற வேண்டும்   என கேட்டுக் கொள்கிறேன் 

****************************************************************************************

12 கருத்துகள்:

  1. சீரிய முயற்ச்சி. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நம் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் பயன் தரும் சிறப்பான திட்டம்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் துணைநிற்கும் நண்பர் முரளி அவர்களுக்கு நன்றி நன்றி. எனது வலைப்பக்கத்தில் உள்ள பதாகையையும் பகிரலாம். நாளை சந்திப்போம்
    வாய்ப்பிருந்தால் சென்னை வலைப்பக்க நண்பர்களுடன் அடுத்த பதிவர் விழாப் பற்றியும் பேச ஆவலுடன் இருக்கிறேன்)
    இரண்டுக்கும் சேர்த்து வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. அழைப்பிதழ் - இதையே எனது நேரடி அழைப்பாக ஏற்று, வந்திருந்து சிறப்பிக்கவும் வேண்டுகிறேன் - http://valarumkavithai.blogspot.com/2017/02/blog-post_24.html வணக்கம்.

    பதிலளிநீக்கு
  5. அய்யா மதுரையில் ஒரு முகாமுக்கு ஏற்பாடு செய்யவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    அண்ணா

    யாவருக்கும் பயனுள்ள திட்டம் தொடர எனது வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மதுரையில் எப்போ முகாம் நடத்தப் போறீங்க ,சொல்லுங்க ஜி :)

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895