தேர்தல் களை கட்டிவிட்டது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறப் போகிறது .அடுத்து தமிழ் நாட்டை யாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போகிறோம் என்று தெரிந்து விடும். நம்ம அப்பாவி அய்யோசாமி க்கு தேர்தல்ல நிக்க ஆசை. அதுக்கு என்ன தகுதி வேணும்னு கேக்கறார் .வேட்பாளாராக என்ன தகுதி வேண்டும் என்று தேர்தல் கமிஷன் என்ன சொன்னதோ அதை அப்படியே அய்யோ சாமிக்கு சொல்லி இருக்கேன்.. அடுத்த தேர்தல் களத்தில நீங்களும் குதிக்க தயாராகுங்க . (அட! முன்னாடியே சொல்லி இருந்தா நாங்களும் தேர்தல் கிணத்துல சாரி தேர்தல் களத்துல குதிச்சி இருப்போமில்ல)
அதுக்கு முன்னாடி இந்த தேர்தல்ல வாக்காளர் வேட்பாளர் புள்ளி விவரங்கள்
தமிழ்நாடு
தேர்தல் 2016 மொத்த வேட்பாளர்கள்: 3776
ஆண்கள் 3454 பேர்
பெண்கள் 320 பேர்
மூன்றாம் பாலினம் 2 பேர்
அதிகபட்ச வேட்பாளர் நிற்கும் தொகுதி : ஆர்.கே.நகர். 43 பேர்.
|
இப்போ அப்பாவி அய்யோசாமியின் கேள்விகள்
1. இவ்வளோ பேர் தேர்தல்ல நிக்கறாங்களே நானும் வேட்பாளரா ஆக முடியுமா?
தாராளமா ஆனா .இந்த எலக்ஷன்ல முடியாது. தேதி முடிஞ்சி போச்சு
2. அய்யோ! அது தெரியும்.அடுத்த தேர்தலுக்கு உதவும் . வேட்பாளருக்கு எவ்வளோ வயசு ஆகி இருக்கணும்?
அதிகம் இல்ல ஜென்டில் மேன் 25 வயசு முடிஞ்சி இருக்கணும்
3. வோட்டர் லிஸ்ட்ல என் பேர் இல்லன்னாலும் வேட்பாளரா ஏத்துக்கு வாங்களா?
முடியாது முதல்ல உங்க பேரை லிஸ்ட்ல சேருங்க
4.வேட்பாளர் டெபாசிட் கட்டணும்னு சொல்றாங்களே . எவ்ளோ கட்டணும்
ரூ10000 கட்டணும். எஸ்.சி. எஸ் டி. வேட்பாளர் 5000 கட்டினா போதும்
5. அய்யோ ரொம்ப அதிகமா இருக்கே. இதுக்கு முன்னாடி எவ்வளோ இருந்தது ?
இதுக்கு முன்பு 250 ரூபாதான் இருந்தது.அதனாலதான் ஏராளமான பேர் எல்கஷன்ல நின்னாங்க. ஒரு முறை(1996) அதிகபட்சமா மொடக்குறிச்சி தொகுதியில 1033 பேர் நின்னாங்க. வாக்கு சீட்டே பொன்னியின் செல்வன் புக் மாதிரி இருந்ததாம்
6. தேர்தல்ல ஜெயிக்கலன்னா டெபாசிட் திரும்ப கிடைக்குமா?
ஜெயிக்கலன்னாலும் பதிவான செல்லத்தக்க ஓட்டுல ஆறில் ஒரு பங்கு ஓட்டுக்கு மேல் வாங்கி இருந்தா டெபாசிட் திரும்ப கிடைக்கும் இல்லன்னா கட்டின டெபாசிட் கோவிந்தாதான்
7.ஒருத்தர் எந்த தொகுதியில வேணும்னாலும் நிக்கலமா?
பதில்:எந்த தொகுதியில வேணும்னாலும் நிக்கலாம்.ஆனா தன்னோட ஓட்டை தன் பேர் இருக்கிற தொகுதியில்தான் போட முடியும்
8. ஒருத்தர் ஒரு தொகுதியில்தான் நிக்கனுமா?
அதிக பட்சமா 2 தொகுதியில மட்டும் நிக்கலாம்.
9. ஏதாவது கட்சியில உறுப்பினரா இருந்தாதான் எலக்ஷன்ல போட்டி முடியுமா?
அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல . சுயேச்சையாகக் கூட நிக்கலாம் அங்கீகரிக்கப் பட்ட கட்சியாய் இருந்தால், ஒருத்தர் உங்களை,வேட்பாளரா முன்மொழிஞ்சா
போதும். அங்கீகரிக்கப்படாத கட்சியின் வேட்பாளர்
அல்லது சுயேச்சையா இருந்தா அந்த தொகுதியில்
இருக்க 10 வாக்களர்களின் முன்மொழிதல் வேனும்.
10. அய்யோ அவ்வளோ பேருக்கு நான் எங்க போறது?தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒரு வேட்பாளர் எவ்வளோ செலவு பண்ணலாம்?
பதில் : அதிக பட்சம் 25 லட்சம் செலவு பண்ணலாம்.
11. என் வோட்டை நான் போடறதுக்கு முன்னாடி யாரவது போட்டுட்டு இருந்தா நான் என் ஓட்ட போட முடியுமா?
போடலாம் . அதுக்கு டெண்டர் ஓட்டுன்னு பேரு.அந்த ஓட்டை , தனி வாக்கு சீட்டை பெட்டியில போடாம தனியா கவர்ல போட்டு சீல் வச்சுடு கொண்டு போயிடுவாங்க. ஓட்டு வித்தியாசத்துல இந்த ஒட்டு உதவும் என்றால் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்
12.அய்யோசாமி: ஒவ்வொரு பூத்லயும் எவ்வளோ ஒட்டு பதிவாச்சுன்னு வேட்பாளருக்கு சொல்வாங்களா?
ஒவ்வொரு பூத்ளையும் வேட்பாளர் தனக்காக ஒரு ஏஜெண்டை நியமிச்சுக்கலாம்.அவங்கள் முன்னாடிதான் ஒட்டு பதிவு இயந்திரம் சீல் வைப்பாங்க. முன்னாடி எந்த ஓட்டும் பதிவாகலன்னு உறுதி படுத்துவாங்க. வாக்குப் பதிவு முடியற நேரத்தில எவ்வளோ ஒட்டு பதிவாச்சுன்னு ஒரு கணக்கு தருவாங்க. அதை ஒட்டு எண்ணுகிற இடத்துக்கு வேட்பாளர் கொண்டுபோகலாம். அங்க விவரங்களை சரி பாக்கலாம்.
13.அய்யோசாமி: ஓட்டுப் பதிவு இயந்திரம் சம்பந்தமா நிறைய சந்தேகம் இருக்கு கேக்கலாமா?
பதில்கள் நாளை
==============================================================
தேர்தல் ஸ்பெஷல் பதிவுகள்
// வாக்கு சீட்டே பொன்னியின் செல்வன் புக் மாதிரி இருந்தது // நிறைய தகவல்கள் தெரிந்துகொண்டேன் ... தங்கள் தளத்தை மீண்டும் கண்டத்தில் மகிழ்ச்சி அய்யா ...
பதிலளிநீக்குஹா....ஹா..ஹா... பொன்னியின் செல்வன் அளவில் வாக்குச் சீட்டு .. தாங்கள் வாக்களிக்க விரும்பும் நபர்களின் பெயரைத்தேட எவ்வளவு சிரம்ப்பட்டிருப்பார்கள்?
பதிலளிநீக்குபோராடிக்காமல் நகைச்சுவை பாணியில் தகவல்களை தந்த விதம் பாராட்டதக்கது
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குதேர்ததலில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் தருகிறார்களாமே அப்படி கொடுக்க வசதி இல்லாத வேட்பளார்களுக்கு அரசாங்கமோ வங்கியோ கடன் தருமா?
'பொன்னியின் செல்வன்' வாக்கு சீட்டு.. என்னாமா இருக்கு? உங்க ஹாஸ்ய உணர்ச்சிக்கு சபாஷ் முரளி!
பதிலளிநீக்குதமிழ்மணத் திரட்டியின் பத்து வோட்டுகள் வாங்குவதற்க்கே நாக்கு தள்ளி விடுகிறது ,நான் தேர்தலில் நின்றால் எங்கே டெபாசிட் பணமும் அம்பேல்தான் :)
பதிலளிநீக்குஎங்களது பல சந்தேகங்கள் தீர்ந்தன. நன்றி.
பதிலளிநீக்குபலருக்கும் தெரியாத ஆனால் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குகடைசிவரை நல்ல நகைச்சுவையான பதில்கள் அருமை
பதிலளிநீக்குஎனக்கு உதவும் தகவல்களான அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயங்களை எழுதுங்கள்.... நண்பரே
தமிழ் மணம் 4
//
பதிலளிநீக்கு8. ஒருத்தர் ஒரு தொகுதியில்தான் நிக்கனுமா?
அதிக பட்சமா 2 தொகுதியில மட்டும் நிக்கலாம்.
//
What will hapen if he/she win in both electorates? Only 233 MLA's for next 6 years? If so, does that person have two votes in any voting at LA?
3454 +
பதிலளிநீக்கு324 +
2 =
3780 வருதே?
- இது எனது சந்தேகம்!
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இப்போது சரி செய்து விட்டேன்/
நீக்குஐய்யோ! அரசியலா???...!!!!!!
பதிலளிநீக்குநல்ல கேள்வி - பதில் கணவருக்கும் பெலத்து வாசித்தக் காட்டினேன்
அவருக்கு அரசியலில் ஆர்வம்.
https://kovaikkavi.wordpress.com/
நல்ல பகிர்வு. பலருக்கும் இச்சந்தேகங்கள் உண்டு....
பதிலளிநீக்குபொன்னியின் செல்வன் அளவு - :))))