என்னை கவனிப்பவர்கள்

புதன், 1 ஏப்ரல், 2015

நானொரு முட்டாளுங்க!

  
                              நான் கழுதை 
                              
                              இன்று முட்டாள்கள் 
                              தினமாம் 
                              இன்றாவது
                              நான் சொல்வதைக் கேளுங்கள் 

                              முட்டாள்களின்
                              உருவகம் நான்!

                              மூடர்களின்
                              உவமானம் நான்!

                              மதி குறைந்து
                              போனதால்
                              பொதி சுமக்கப்
                              பிறந்தவனாம்!

                              குரல் வளத்தில்
                              காக்கையும் நானும் 
                              கைவிடப் பட்டவர்கள்.

                              குட்டியாய் இருக்கும்போது
                              குதிரையைப் போல்
                              நானும் அழகுதான்!   
        
                              கழுதை வளர்ந்து
                              குதிரை ஆனதா
                              குதிரை தேய்ந்து
                              கழுதை ஆனதா?
                              டார்வினிடம்தான்
                              கேட்கவேண்டும்

                              கத்திப் பேசுபவர்கள் எல்லாம்
                              கழுதைப் பாலை கொஞ்சம்
                              அதிகம் குடித்தவர்களாம்.

                               "என்னைப்பார் யோகம் வரும்"
                               என் படத்தை  மாட்டி
                               எழுதி வைத்திருக்கிறீர்கள்.

                                உங்களுக்கு
                                யோகம்வரும்;
                                எனக்கு?

                                பிறரை  ஏசும்போதும்
                                என் பெயரே
                                உங்களுக்கு நினைவு வரும்!

                                மாடுகள்கூட
                                மதிப்பிழந்துபோன வேளையில்
                                கழுதைகளுக்கு ஏது கவனிப்பு?

                                எனக்கு  
                                தெரியாதுதான்;
                                கற்பூரவாசம்!

                                நான்  
                                தேடியும்  கிடைக்காதது 
                                அன்பு, நேசம் 

                                கட்டிப்  பிடிக்க
                                யாரும் இல்லை!
                                அதனால் 
                                எட்டி  உதைத்து 
                                என் கோபத்தை 
                                வெளிப்படுத்துவேன்!
                                என்ன செய்வது? 

                                காலச் சுழற்சியில்
                                எம்மினம் 
                                காணாமல் போகும்!

                                ஏளனப் பொருட்களாக 
                                எங்களை பார்ப்பவர்களே!
                                உங்களிடம்
                                ஒன்றுமட்டும் சொல்கிறேன்.

                                முட்டாள்களுக்கும்
                                இந்த  மண்ணில்
                                கொஞ்சம் இடம் கொடுங்கள்

                                அவர்களை வைத்துத்தான்
                                அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்.

                *********************
சில கழுதைக் குறிப்புகள் 

  1. கழுதைகளின்  மூல இருப்பிடம்ஆப்ரிக்க பாலைவனங்கள் என்று கூறப்படுகிறது.
  2. சாதரணமாக கழுதைகள் 3 வகைகளில் காணப்படுகின்றன. 36 இன்ச்சுகளுக்கு குறைவானவை.சிறுகழுதைகள், 36 லிருந்து 54'' வரை நடுத்தரக் கழுதைகள்,56'' மேலுள்ளவை மம்மூத் என்று அழைக்கப்படும் பெருங்கழுதைகள்.
  3. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் முதல் மம்மூத்தை வளர்த்தவர்.
  4. கழுதைகள் உண்மையில் புத்திசாலித் தனமானவை.ஆனால்  அறிவில்லாத மிருகம் என்று தவறாகக் கருதப்படுகிறது.
  5. ஒரே அளவில் உள்ள கழுதையையும் குதிரையையும் ஒப்பிடும்போது கழுதையே வலிமையானது.
  6.  கழுதைகள் அபார ஞாபக சக்தி வாய்ந்தது.25 ஆண்டுகளுக்கு முன்னால்வாழ்ந்த இடத்தையும் உடனிருந்த கழுதையும் கண்டுபிடித்துவிடும் திறமை உடையது.
  7. கழுதையை எளிதில் பயமுறுத்தி விட முடியாது.
  8. ஆண் கழுதை ஜாக் என்றும் பெண் கழுதை ஜென்னி என்றும் அழைக்கப் படுகிறது.
  9. ஆண்  கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்தவை ம்யூல்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
  10. பெண்  கழுதைக்கும் ஆண் குதிரைக்கும் பிறந்தவை ஹின்னீஸ்
  11.  கழுதைகளுக்கு மழையில் நனைவது பிடிக்காது.இயற்கையில் அதன்தோல் பிற விலங்குகளைப் போல் வாட்டர் ப்ரூஃப் ஆக அமையவில்லை 
  12. நன்கு  பராமரிக்கப் பட்டால் கழுதை 40 ஆண்டுகள் கூட உயிர் வாழும்.
  13. கழுதைப்பால் கிராமப் புறங்களில் மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
                   *******************************************

இந்தக் கதையை படியுங்கள் சிரிப்புக்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு 
        

40 கருத்துகள்:

  1. கழுதை பற்றி அறியாத பல செய்திகள் அறிந்தேன் நன்றி ஐயா
    தம 1

    பதிலளிநீக்கு
  2. கழுதை பற்றிய தகவல்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. ஒரு நாள் என் வீட்டின் முன்னால் ஒரு கழுதை நின்று கொண்டிருந்தது. அவ்வழியே காரில் சென்ற ஒருவர் காரை நிறுத்தி இறங்கி வந்து கழுதையைத் தொட்டுக் கும்பிட்டுப் போனார். கழுதை வழிபாடை முதன் முதல் பார்த்தேன்.
    குதிரையைப் பழக்குவது மாதிரி கழுதையைப் பழக்க முடியாதோ. ?

    பதிலளிநீக்கு
  4. கழுதை வளர்ந்து
    குதிரை ஆனதா
    குதிரை தேய்ந்து
    கழுதை ஆனதா?
    டார்வினிடம்தான்
    கேட்கவேண்டும்//

    நல்ல வரிகள்! கழுதை பற்றிய தகவல்கள் தரலாம் என்று வந்தால் தாங்களே கொடுத்திருக்கின்றீர்கள். அந்த வேலை மிச்சமாகிவிட்டது! அருமையான வரிகள். ஏன் கழுதையை முட்டாள் என்று சொல்லுகின்றார்கள்! என்று மண்டை காய்ந்ததுதான் மிச்சம். நாங்களும்கழுதை பற்றி ஒரு இடுகை போட்டோம். அதன் பயன் பற்ரி! அதே போல எருமை மாட்டைப் பற்றியும். கழுதையும் அழகுதான், எருமையும் அழகுதான்! இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள் அது பஞ்ச்!!! அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. \\குட்டியாய் இருக்கும்போது
    குதிரையைப்
    நானும் அழகுதான்! \\
    போல், போல, அல்லது போன்ற... என்ற ஏதோ ஒரு வார்த்தை விடுபட்டுப் போயுள்ளது. சேர்த்துவிடுங்கள். மற்றபடி கழுதையைப் போலவே உங்கள் கவிதையும் மிகவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுபட்டதை சுட்டிக் கட்டியமைக்கு மிக்க நன்றி சார்
      எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை. அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிவை வெளியிட்டு விட்டுவிட்டு புறப்பட்டு விட்டேன். அவ்வாறு செல்லும்போதெல்லாம் பிழைகள் சரி செய்யப்படாமல் விடுபட்டுப் போய்விடுகின்றன. இனி கவனத்துடன் இருக்க முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  6. கழுதை என்று சொல்லுவதில் இவ்வளவு விஷயங்களா......!!!
    மம்மூத் என்றால் பழங்காலத்தில் இருந்து மிகப் பெரிய யானை என்றல்லவா படித்திருக்கிறேன்.
    கழுதையும் அப்பெயரால் அறியப்படுகிறதா.?
    சுவாரசியமான தகவல்கள்தான்.

    நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு...

    தனக்கிட்ட பணியை செய்துவிட்டு அமைதியாய் நிற்கும் பிராணியை முட்டாள் என உருவகப்பத்தியது வழக்கம் போலவே தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் " புத்திசாலி " மனிதனின் " முட்டாள்தனம் " தான் !!!

    சந்திரபாபுவின், " நானொரு முட்டாளுங்க !... " பாடலின் நினைவு வருகிறது....

    எனது புதிய பதிவு : " த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2015/03/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  8. நான் சொல்ல நினைத்த திருத்தத்தை,திரு அமுதவன் சொல்லி விட்டார்.

    குரல்வளத்தில் மயிலுக்கும் இடம் உண்டு!!!

    கடைசி வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம் சார். விடுபட்டதை சரி செய்ஹ்டு விட்டேன். ஆனால் அலுவலகத்திலிருந்து திரும்பியபின்தான் செய்ய முடிந்தது

      நீக்கு
  9. நான் சொல்ல நினைத்த திருத்தத்தை,திரு அமுதவன் சொல்லி விட்டார்.

    குரல்வளத்தில் மயிலுக்கும் இடம் உண்டு!!!

    கடைசி வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  10. //முட்டாள்களுக்கும்
    இந்த மண்ணில்
    கொஞ்சம் இடம் கொடுங்கள்

    அவர்களை வைத்துத்தான்
    அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்//

    சரியான சாட்டையடி.
    கழுதை பற்றிய தகவலோடு கூடிய கவிதை அருமை.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. கழுதை பற்றிய விடயங்கள் சுவாரஸ்யமானவயாகவே உள்ளது.
    மதி குறைந்து
    போனதால்
    பொதி சுமக்கப்
    பிறந்தவனாம்! அருமை அருமை.

    முட்டாளிடம் தானே அதிக வேலை வாங்கலாம் ஏனெனில் திருப்பி கேள்வி கேட்க மாட்டார்களே புத்திசாலிகள் அதிகமாக கேள்வி கேட்டே கொன்றுவிடுவர்.

    பதிலளிநீக்கு
  12. கழுதையை ஹிந்து மதம் கூட கை கழுவிட்ட மாதிரி தோணுது ,எத்தனையோ உயிரினங்களுக்கு கதை கட்டியவர்கள் கழுதைக்கு எதுவும் சொன்னதாக தெரியவில்லையே :)

    பதிலளிநீக்கு
  13. நல்ல கவிதை நண்பரே காலையிலேயே படித்து வாக்கு அளித்து விட்டேன் செல் மூலம்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் முரளி...
    அய்யா நீர் கவிஞர், கவிஞர்தான்!
    ஒரு முன்னாள்) கவிஞன் சொல்கிறேன்..நீர் கவிஞரேதான்
    அருமையான கவிதை..அதுவும் பெரும்பாலோர் எழுதாத
    கழுதையைப் பற்றி எவ்வளவு உணர்வுப்பெருக்கு!

    முட்டாள்களின்
    உருவகம் நான்! - என்று தொடங்கி,
    முட்டாள்களுக்கும்
    இந்த மண்ணில்
    கொஞ்சம் இடம் கொடுங்கள்
    அவர்களை வைத்துத்தான்
    அறிவாளிகள் அளக்கப்படுகிறார்கள்“
    என்று முடித்தது மிகவும் அருமை!
    அவ்வப்போதும் இதுபோல எழுதுங்கள் முரளி.
    நன்றி பாராட்டும் விதமாக த.ம.9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா தங்களின் பாராட்டுக்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா! நிச்சயம் எழுதுகிறேன்
      ஐயா தாங்கள் எப்போதும் கவிஞரே.

      நீக்கு
  15. வணக்கம்
    முரளி அண்ணா.

    இன்றைய நாளுக்கு அமைவாக கவிதை புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன்... அத்தோடு கழுதை பற்றிய தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  16. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள அய்யா,

    நானொரு முட்டாளுங்க!
    நல்லாத் தெரிஞ்சவங்க
    நாலு பேரு சொன்னாங்க...
    நானொரு முட்டாளுங்க...
    நான் கழுதை...மனசாட்சியாய்
    நல்ல கவிதை... பேசுயது...!


    கழுதையைப் பற்றி...
    ‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு...’
    கழுதைக்கும் தன் குரல் அப்படித்தானே!

    கோவேறு கழுதையில் (பெண் குதிரைக்கும் ஆண் கழுதைக்கும் பிறந்தது) தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர், ஒரு கோவேறு கழுதை குட்டியின் மீது அமர வைத்து ஜெருசலேம் நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தியபடி, ‘‘ஓசன்னா! தாவீதின் குமாரா, ஓசன்னா, ஓசன்னா... ஓசன்னா!’’ என்று ஆர்ப்பரித்தனர்.

    இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை ‘குருத்தோலை ஞாயிறு’ ஆக அனுசரிக்கப்படுகிறது என்ற ஒரு செய்தியும் உண்டு.

    ‘வடிவேலு வாங்கிய கழுதை’ நன்றாக... வடிவேலு பேசுவதைப் போலவே கற்பனையாக எழுதியது பாராட்டுதலுக்குரியது. நன்றாக இருக்கிறது...புதுமைப்பித்தனின் ‘சாப விமோச்சனம்’ போல... (இராமாயணத்தில் ) இராமன் கால்பட்டு அகலிகை பெண் ஆகலாம்... அதுபோல கழுதை பெண் ஆனது... நன்றாக இரசிக்கும்படி... நன்கு சிரிக்கும்படி கதை இருந்தது.

    நன்றி.
    த.ம. 12.

    பதிலளிநீக்கு
  18. அருமையான தகவல்கள். நன்றி.
    TVS 50 வந்து கழுதையை replace செய்து விட்டது. வெளுக்கும் தொழிலும் அனேகமாக அழிந்து விட்டது. நான் இது சம்பந்தமாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    நன்றி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  19. பாவம் கழுதை......

    அறியாத தகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தேவையில்லாமல் கழுதைகளை முட்டாள்களோடு சேர்த்து வம்பிழுக்கும் முட்டாள்கள்தான் மனிதர்கள்! வியக்க வைத்த தகவல்கள்! சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  21. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/07/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    பதிலளிநீக்கு
  22. திரு வை.கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in/ என்ற தன்னுடைய தளத்தில் உங்களைப் பற்றி விவாதிக்கிறார். வாழ்த்துக்கள்.
    http://www.drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  23. ஏ அப்பா கழுதை பற்றிகூட இவ்வளவு செய்திகளா? கோபாலகிருஷ்ணா சாரின் அறிமுகம் பார்த்து வந்தேன்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895