கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம். திடீரென்று ஒரு நாள் உங்கள் வலைப்பூ காணாமல் போய்விட்டால் என்ன செய்வது? அப்படி சிலருக்கு நடந்தும் இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ ஹேக்கர்களிடம் சிக்கி வலைப் பூவை இழந்திருக்கிறார்கள் சிலர். சமீபத்தில் அதிக அளவில் எழுதி வந்த நம்பள்கி அவர்களின் வலை தளத்தை காணவில்லை. இந்த வலை தளத்தை அவரே முடக்கி விட்டாரா அல்லது வேறு யாரேனும் கைவரிசை காட்டினார்களா தெரியவில்லை.இதுபோல் ஏமாறுபவர்களில் தொழில் நுட்பம் தெரிந்தவர்களும் இருக்கின்றனர் என்பது வேடிக்கை .
பொன்மலர் என்ற தொழில் நுட்பப் பதிவரும் விளம்பர ஆசை காட்டப்பட்டு தன் மெயில் கடவுச்சொல்லை நம்பித் தர, தன் "பொன்மலர் பக்கங்கள்" என்ற வலைப்பூவை இழந்தார். பின்னர் சாமார்த்தியமாக அதை மீட்டெடுத்தது தனிக் கதை.
நீண்ட நாட்களாக எனது வலைப்பதிவுகளை பேக் அப் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்ததுண்டு. தொடக்கத்தில் ஒவ்வொரு பதிவையும் word இல் சேமித்து வைத்திருந்தேன்.ஆனால் தொடர்ந்து அதைப் பின் பற்ற முடியவில்லை.
வேறு எளிய வழி ஏதேனும் உண்டா என்று தேடிய போது ப்ளாக்கரிலேயே அந்த வசதி இருப்பதை அறிந்து கொண்டேன்.
(நானெல்லாம் சரியான வெண்குழல் விளக்கு வகையை சேர்ந்தவன் என்பவன் என்பதால் எதையும் தாமதமாகத் தான் புரிந்து கொள்வேன்.ஹிஹி)
(நானெல்லாம் சரியான வெண்குழல் விளக்கு வகையை சேர்ந்தவன் என்பவன் என்பதால் எதையும் தாமதமாகத் தான் புரிந்து கொள்வேன்.ஹிஹி)
எனது 330 க்கும் மேற்பட்டபதிவுகள் கொண்ட மூங்கில் காற்று வலைப் பூவை பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டேன்.
நான் பேக் ப் எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாகப் போயிற்று என்றே நினைக்கிறேன். இப்படி நினைத்தற்குக் காரணம் எனது கூகுள் அக்கவுண்டை திறக்க யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள். அலுவலகத்திலோ அல்லது வேறு கணினிகளிலோ நாம் நமது ஜிமெயில் அக்கவுண்டுகளை பயன்படுத்துவது வழக்கம்தான். அப்போதெல்லாம் கூகிள் அவற்றை நமக்கு சுட்டிக் காட்டும் . பயன்படுத்திய நேரம் இடம் நமக்கு தெரியும் என்பதால் அவற்றை பொருட்படுத்துவதில்லை . சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மெயில் திறக்கும்போது ஒரு Unusual Activity என்று எச்சரிக்கை செய்தியை கூகிள் காட்டியது . முதலில் அலட்சியம் செய்து விட்டேன். பின்னர் ஏதோ தோன்ற மீண்டும் விவரங்களைப் பார்த்தபோது சற்று அதிர்ச்சி ஏற்படத்தான் செய்தது. அமெரிக்காவில் ஒருவர் எனது மின்னஞ்சல் கணக்கை திறக்க முயற்சித்ததைக் காட்டியது
இந்த ஆக்டிவிடி உங்களுடையதாக இல்லாத பட்சத்தில் உங்கள் கடவு சொல்லை மாற்றி விடுங்கள் என்று ஆலோசனை கூறியது கூகுள். அதனால் எனது கடவுச் சொல்லை மாற்றி விட்டேன். நீங்களும் உங்கள் கடவு சொற்களை மாற்றிவிடுவது நல்லது.
இப்போது ப்ளாக் ஐ பேக் எடுப்பது எப்படி என்று பார்ப்போம்.
இதைப் பற்றி அறியாத புதிய பதிவர்களுக்கு மட்டுமே.
உங்கள் வலைப்பூவில் sign in செய்து உள்நுழைந்து Dash board இல் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
படி 1
படி 3
கீழ்க்கண்டவாறு ஒரு பெட்டி தோன்றும் அதில் டவுன் லோட் ப்ளாக் ஐ க்ளிக் செய்தால் blog முழுவதும் சிறிது நேரத்தில் டவுன்லோட் ஆகிவிடும்
அக் கோப்பு கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும். இதனை திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் நமது பதிவுகள் அனைத்தும் பின்னூட்டங்களுடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.
உங்கள் வலைப்பூவில் sign in செய்து உள்நுழைந்து Dash board இல் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
படி 1
செட்டிங்க்ஸ் மெனுவில் கடைசி ஆப்ஷனான Others ஐ க்ளிக் செய்வும் .
பின்னர் Blog Tools பகுதியில் Import Blog-Export blog-delete blog என்ற மூன்று ஆப்ஷன்கள் உள்ளதைக் காணலாம் இதில் Export Blog ஐ தேர்ந்தெடுக்கவும்.
பக்கத்திலேயே Delete Blog ஆப்ஷன் உள்ளதால் கவனமாக இருக்கவேண்டும். தப்பித் தவறி அதனை க்ளிக் செய்துவிடக் கூடாது.
படி 2
படி 3
அக் கோப்பு கீழ்க்கண்டவாறு தோற்றமளிக்கும். இதனை திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் நமது பதிவுகள் அனைத்தும் பின்னூட்டங்களுடன் சேமித்து வைக்கப் பட்டிருக்கும்.
இதனை கணினியிலோ, பென் டிரைவிலோ சி டியிலோ சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
கொடுக்கப்பட்ட எண்களை தட்டச்சு செய்து நாம் ரோபோட் அல்லஎன்பதை உறுதி செய்து Import blog ஐ க்ளிக் செய்தால் போதும் . பழைய ப்ளாக்கின் பதிவுகள் அனைத்தும் புதிய ப்ளாக்கிற்கும் வந்து விடும். இதற்கு சிறிதுநேரம் பிடிக்கும். பதிவுகளின் எண்ணிக்கையை பொறுத்து நேரம் கூடுதலாகவோ குறைவாகவோ ஆகலாம் .
மேலுள்ள படத்தில் Automatically publish all imported posts and pages என்பதற்கு முன் உள்ள செக் பாக்ஸில் டிக் செய்யப்பட்டிருந்தால் அனைத்து பதிவுகளும் பப்ளிஷ் ஆகிவிடும். இரண்டு ப்ளாக்கிலும் பதிவுகள் இருக்கும் நாம் இதை பேக்கப் ஆக மட்டுமே பயன்படுத்துவதால் இந்த செக் பாக்ஸில் உள்ள டிக்கை நீக்கி விடுவது நல்லது. பதிவுகள் draft ஆக புதிய ப்ளாக்கின் டேஷ் போர்டில் இருக்கும். வேண்டுமானால் பப்ளிஷ் செய்து கொள்ளலாம்
படத்தில் மூங்கில் காற்றின் பதிவுகள் பார்வைகள் பலவிதம் ப்ளாக்கில் இறக்கம் செய்யப்பட்டிருப்பதை பார்க்கலாம் . இவற்றை பப்ளிஷ் செய்யாமல் வைத்திருக்கிறேன். |
இவ்வாறு வலைப்பூவை பேக் அப் எடுக்கும்போது பதிவுகளும் கம்மேன்ட்களும் மட்டுமே புதிய பிளாக்கிற்கு ஏற்றம் செய்யவேண்டும். முந்தைய ப்ளாக்கின் டெம்ப்ளேட்டைப் போலவே இருக்க வேண்டும் என்றால் டெம்ப்ளேட்டை முன்னதாக பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். அல்லது புதிய வேறுவித டெம்ப்ளேட்டை அதிலேயே தேர்வு செய்து கொள்ளலாம்.
டெம்ப்ளேட் பேக் அப் எடுக்க ப்லாக்கிற்குள் நுழைந்து Template ஆப்ஷனில் Backup/Restore ஐ க்ளிக் செய்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் டெம்ப்ளேட்டை சேமித்து வைத்துக் கொண்டு புதிய ப்ளாக்கிற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம்
புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
*****************************************************************************
இது போன்ற குறிப்புகளை புதுக் கோட்டை பட்டறையில் சொல்ல நினைத்தேன். நேரமின்மை காரணமாக முடியவில்லை
***************
கற்றுக்குட்டியின் முந்தைய கணினிக் குறிப்புகள் . (ஒரு வேளை யாருக்கேனும் பயன்படலாம்)
மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
பதிலளிநீக்குகுறித்து வைத்துக் கொண்டேன் ஐயா
மிக்க நன்றி
தம 2
பதிலளிநீக்கு#புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.#
பதிலளிநீக்குபுதியவர்களுக்கு மட்டுமல்ல ,பழம் தின்று கொட்டை போடாத என்னை போன்றவர்களுக்கும் பயனுள்ள தகவல் ..நன்றி !
த ம 3
வழிகாட்டுதலுக்கு நன்றி முரளி.
பதிலளிநீக்குஎன் வலைப்பூவை இன்றே ‘பேக் அப்’ எடுக்கவுள்ளேன்.
நன்றி ஐயா
நீக்குஅப்பாடா...! அடுத்த பகிர்வில் எழுத வேண்டும் என்று இருந்தேன்... இப்போது இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்... படங்களுடன் விளக்கம் அசத்தல் + மிகவும் பயனுள்ளவை... நன்றி... நன்றி...
பதிலளிநீக்குதனபாலன் அண்ணா.... உண்மையில் இது குறித்து நான் நேற்று உங்களுக்கு ஒரு மெயில் பண்ணினேன். ஆனால் திரும்பிவிட்டது. அதே செய்தியைக்குறித்து மூங்கில் காற்றும் பதிவு வெளியிட்டுள்ளார்.
நீக்குதவிர ஏனா தெரியவில்லை.... உங்களின், மற்றும் சிலரின் தளங்களில் தமிழ் எழுத்தில் எழுத முடியவில்லை...? ஏன்.
உங்களை எப்படி தொடர்பு கொள்வது...?
எனது மின் அஞ்சல் முகவரியில் நீங்களாவது தொடர்பு கொள்ளங்கள்.
நன்றி.
avvaipaatti@live.fr
மின்னஞ்சல் குறித்துக் கொண்டேன்... இனி உங்களின் முகவரிக்கு தகவல் வரும் சகோதரி...
நீக்குdindiguldhanabalan@yahoo.com
அனைவருக்கும் பயன்படும் அவசியமான பதிவு
பதிலளிநீக்குவிளக்கமாக எளிதாக பதிவாக்கித் தந்தமைக்கு
நல்வாழ்த்துக்கள்
நன்றி ராமனை சார்
நீக்குபயனுள்ள பதிவு பாராட்டுக்கள்..... எனக்கு எல்லாம் உங்களைப் போல கவலை இல்லை காரணம் எனது பல பதிவுகள் எனது கிறுக்கல்கள்தான் அதனால் யாருக்கு என்ன பயன் போனாப் போகுது என்று விட்டுவிடுவேன் என்னைப் பொறுத்தவரை இது ஒரு பொழுது போக்கே ஒன்று போனால் இன்னொன்று அவ்வளவுதான்
பதிலளிநீக்குஎப்படி எழுதியாதாக இருப்பினும் நாம் எழுதியது அல்லவா?பாதுகாத்து வைப்பது நல்லது
நீக்குதகவலுக்கு நன்றி! மீண்டும் ஒரு முறை படித்து குறிப்புகள் எடுத்து அதன்படி நானும் ” பேக் அப்” செய்ய வேண்டும்.
பதிலளிநீக்குத.ம.7
எளிமையானதுதான் . முயற்சித்துப் பாருங்கள் ஐயா
நீக்குசூப்பர் info.... நான் உடனே backup எடுத்துட்டேன்
பதிலளிநீக்குநன்றி நன்றி
நீக்குsuper...step by step செய்து save செய்து விட்டேன். நன்றி...
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குநன்றி
நீக்குநல்ல பயனுள்ள பதிவு மூங்கில் காற்று. நன்றி.
பதிலளிநீக்குத.ம. 8
நன்றி
நீக்குபயனுள்ள தகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குஇவை அனைவருக்கும் மிகவும் பயன்படும் அருமையான குறிப்புகள்! அன்பு நன்றி!!
பதிலளிநீக்குஎன்னைவிட கணினி அறிவு அதிகம் உள்ளவரை அருகில் வைத்துக் கொண்டு செய்ய வேண்டும் . பகிர்வுக்கு நன்றி எனக்கும் கூகிளிலிருந்த இம்மாதிரி எச்சரிக்கை வந்தது.
பதிலளிநீக்குஎனக்குப் புரியாதது மட்டுமல்ல செய்யத் தெரியாது! வாழ்க தங்கள் பணி!
பதிலளிநீக்குபலருக்கு பயன் தரும் தகவல்..... எனது பதிவுகளை அவ்வப்போது சேமிப்பது வழக்கம்.....
பதிலளிநீக்குரொம்ப நன்றி சகோ! பயன் தரும் அவசியமான பதிவு தந்திருக்கும் ஏனைய பதிவுகளையும் பார்க்கிறேன் நன்றி வாழ்த்துக்கள் ......!
பதிலளிநீக்குபுதியவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
பதிலளிநீக்குமிகுந்த பயனுள்ள பதிவு இது...
பதிலளிநீக்குதேவையான அறிவுரைகள்...
வணக்கம் ஐயா
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள தகவல் ஐயா. புதியவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே ஒரு எச்சரிக்கை உணர்வைத் தருகின்ற பதிவு. தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கு தெரிவித்து அவர்களும் பயன்பட வேண்டுமெனும் தங்கள் உயரிய குணத்திற்கு சிரம் தாழ்த்திய வணக்கத்துடன் நன்றிகளும்.
மிக அருமையான ஒரு தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி! நானும் பேக் அப் எடுக்க வேண்டும்!
பதிலளிநீக்குபயன் உள்ள பகிர்வு அண்ணாச்சி நன்றிகள்
பதிலளிநீக்குஐயா எனது வலையுலக குருவே! இதற்காகத்தான் அய்யா தங்களைப் புதுக்கோட்டைக்கு வரவழைத்தோம்... “போங்கடா நீங்க சரியாப் பயன்படுத்திக்கல.. அதனால என்ன? நான் ஆர்வமுள்ள அனைவர்க்கும் சொல்வேன்“ என்று மண்டையில் அடித்துச் சொல்லியிருக்கிறீர்கள். நான் உடனே செயல்படுத்திவிட்டேன் குருவே! புதியவலைப்பக்கத்தில் அப்லோடு ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. 300க்கும் மேற்பட்ட பதிவுகள் ! முடிந்தவுடன் மீண்டும் அந்த எனது இரண்டாவது வலைப்பக்கத்தை இதே பின்னூட்டத்தில் மீண்டும் இடுவேன். “கற்றது கை பென்டிரைவ் அளவு, கல்லாதது கணினி அளவு” - என்பதை மெய்யாக உணர்ந்தேன். என் நண்பர்கள் அனைவர்க்கும் சொல்வேன் நன்றியோ நன்றி அய்யா.
பதிலளிநீக்குமிகவும் பயனுள்ள நுட்பத்தை எளிமையாக யாவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குசெல்பேசியில் வலைப்பதிவு எழுதுவது சாத்தியமா?
பதிலளிநீக்குவருக விசு ! ஆண்ட்ராயிட் செல் பேசி இருந்தால் தமிழில் எழதுவதற்கு apps உள்ளன. தாரளமாக எழுத முடியும்
நீக்குசகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு இந்த லின்க் கொடுத்திருக்கிறேன். நானும் பேக் அப் எடுத்து விட்டேன். நன்றிங்க. ஒரு சந்தேகம் இதை வேர்ட் பைலாக பார்க்க முடியாதா ?
பதிலளிநீக்குதோழி சசிகலாவின் வழிகாட்டலால் உங்கள் பதிவைக் காணமுடிந்தது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உடனடியாக என் வலைப்பக்கத்தை பேக் அப் எடுத்துக்கொண்டேன். மிகவும் நன்றி முரளிதரன். உதவிய சசிகலாவுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குநல்ல பதிவு அண்ணா.
பதிலளிநீக்குஎனது பதிவுகளை thumitham.com இல் பார்வையிடுங்கள்
பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பதிலளிநீக்குஇன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
நன்றி வாழ்க வளர்க
மேலும் விவரங்களுக்கு
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
Datain
Mktyping