கீழே ஒரு பிரபல கவிஞரின் கவிதைகள் மூன்றை தந்திருக்கிறேன். இந்தக் கவிஞரின் (ஏற்கனவே கொஞ்சம் நினைவில் இருந்த) கவிதை ஒன்றைத் தேடினேன். அது கிடைக்கவில்லை. வேறுசில கவிதைகளே கிடைத்தன. அவற்றில் என்னைக் கவர்ந்த மூன்றை மட்டும் இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
ஒரு சின்ன போட்டி. இந்தக் கவிதைகளை எழுதியவர் யாரென்றுசொல்ல வேண்டும் .
இந்த மூன்று கவிதைகளிலும் கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன். கவிஞரின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக!
இந்த மூன்று கவிதைகளிலும் கொஞ்சம் திருத்தங்கள் செய்திருக்கிறேன். கவிஞரின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக!
இரண்டு பேருக்கு மட்டும் நிபந்தனை . பதிவின் முடிவில் பார்க்க
புரோகிதரே போதும்
வந்து திரும்ப
வழி செலவுத் தொகை ,
ஏசி வசதியுள்ள விடுதி,
சுண்டக் காய்ச்சிய பசும்பால்,
முந்திரிப் பருப்பு
முடிந்தால்
முயல் கறி; மான்கறி
முக்கியம் பிரியாணி
கடிதம் கண்டதும்
ஆசையாய்
சீர்திருத்தத் திருமணம்
செய்யக் கருதிய
தனபாலனுக்கு தலை சுற்றியது
அவனையும் மீறி வாய் கத்தியது
"அம்மா சொன்ன
அய்யரே போதும்"
கடவுளைத் தேடி
"இருக்கிறார் கடவுள் "
"இல்லை கடவுள்"
வாதம் பிறந்தது ;
மோதல் வளர்ந்தது
இப்போது
இல்லை ஒருவர் இங்கே
இன்னொருவர் இருக்கிறார்
தலைமறைவாக
தமிழ்ப் பற்று
தேவ பாஷை
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்
"ஜாதி வேண்டும் "
"ஜாதி வேண்டும் "
சீறி எழுந்தார்
தமிழ்மறவர் ஒருவர்
ஓங்கிக் கத்தினார்
"ஒய்! ஓய்!
இனி நீர்
ஜாதி வேண்டும் என்றால்
பொறுமையாக
இருக்க முடியாது என்னால்
'சாதி' வேண்டும் என்று
சரியாய் சாற்றும்
**************************************************
"இருக்கிறார் கடவுள் "
"இல்லை கடவுள்"
வாதம் பிறந்தது ;
மோதல் வளர்ந்தது
இப்போது
இல்லை ஒருவர் இங்கே
இன்னொருவர் இருக்கிறார்
தலைமறைவாக
தமிழ்ப் பற்று
தேவ பாஷை
சாஸ்திரி ஒருவர்
சபையில் சொன்னார்
"ஜாதி வேண்டும் "
"ஜாதி வேண்டும் "
சீறி எழுந்தார்
தமிழ்மறவர் ஒருவர்
ஓங்கிக் கத்தினார்
"ஒய்! ஓய்!
இனி நீர்
ஜாதி வேண்டும் என்றால்
பொறுமையாக
இருக்க முடியாது என்னால்
'சாதி' வேண்டும் என்று
சரியாய் சாற்றும்
**************************************************
1. கவிஞர் முத்துநிலவன் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டாம் . தனியாக மின்னஞ்சல் அனுப்பவும்
2. தேடல் மன்னன் வௌவால் இணையத்தில் தேடாமல் இதற்கு பதில் சொல்வதென்றால் சொல்லலாம் .
விடை அறிய கீழே க்ளிக் செய்யவும்
கவிஞரின் பெயர்
விடை அறிய கீழே க்ளிக் செய்யவும்
கவிஞரின் பெயர்
****************************************************
படித்து விட்டீர்களா?
முரளி,
பதிலளிநீக்குஆஹா என்னையே கலாய்க்கிறிங்களே அவ்வ்!
விடைக்கண்டுப்புடிச்சுட்டேன் ஆனால் சொல்லக்கூடாதுனு சொன்னதாலே, சொல்லலை,
"கடவுளைத்தேடி" என்ற ரெண்டாவது கவிதையில கடைசியில ஒரு வரி விட்டுப்போச்சு அதை மட்டும் சொல்லிக்கிறேன் ,
போத்தனூர் காவலர்
புலனாய் கின்றார்!
# உங்களுக்கு "கிருஷ்ண பக்தை"னா ரொம்ப புடிக்கும் போல இருக்கே ?
வவ்வாலுக்கு மீயொலி அலைகள் மூலம் பொருட்களை கண்டறியும் ஆற்றல் உள்ளதை ஒத்துக் கொள்கிறேன்.
நீக்குஎவ்வளவு தாழ்வாக பறந்தாலும் வவ்வாலின் ராடாரில் இருந்து தப்ப முடியவில்லையே
# உங்களுக்கு "கிருஷ்ண பக்தை"னா ரொம்ப புடிக்கும் போல இருக்கே ?//
நீக்குஎன் பேர் முரளிதரன் தானே
அந்த வரிகளை நானாகத்தான் விட்டுவிட்டேன். அவை இல்லாமலேயே கவிதை முழுமை பெற்றதாக தோன்றியது,
நீக்குமற்ற இரண்டு கவிதைகளில் கூட சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
கவிதை ரசிகர்கள் மன்னிப்பார்களாக
முரளி,
நீக்குரேடார்லாம் சொல்றிங்க ம்ம்?
# உங்க பேரு வச்சு தான் கிருஷ்ன பக்தை பிடிக்குமானே கேட்டேன் ஹி...ஹி.
# //மற்ற இரண்டு கவிதைகளில் கூட சிறு திருத்தங்கள் செய்திருக்கிறேன்.
கவிதை ரசிகர்கள் மன்னிப்பார்களாக//
ஹி...ஹி அய்யரே போதும்னு கவிதையில வந்தாலும் புரோகிதரே போதும்னு கூட திருத்தமா தான் பதிவுக்கு தலைப்பு வச்சிருக்கிங்க அவ்வ்!
# நீங்க எதை வச்சு கடைசி ரெண்டு வரியில்லாமலே முழுமைப்பெருதுனு முடிவுக்கு வந்தீங்களோ தெரியாது ஆனால் கவிதை சொல்லவந்த "கருத்து அல்லது கதை" முழுமையாக வெளிப்படலையே.,
வாதத்தின் விளைவாக ஒருவரை இன்னொருவர் கொன்று விட்டார் என்பதையே போத்தனூர் காவலர் புலனாய்கிறார் சொல்ல வருகிறது.
அவ்வரி இல்லாமல் ,ஏன் ஒருவர் இல்லை ஏன் இன்னொருவர் தலைமறைவாக இருக்கிறார் என்பதற்கு விளக்கம் கிடைக்காது.
உங்க பதிவ படிச்சிட்டேன்னு சொல்ல வந்தேன். ஹிஹிஹி (அங்க கம்மென்ட் போடல)
நீக்குஅதற்கான விளக்கத்தை யோசிக்க வைக்கறது கவிதைக்கு அழகா இருக்கும்னு எனக்கு தோணிச்சி ..
உண்மையான தலைப்பே புரோகிதரே போதும் என்பதுதான் .
கவிதைகள் கலக்கல்! விடை தெரியவில்லை! வவ்வால் க்ளு கொடுத்தும் புலனாக வில்லை! என்னமோ தெரியவில்லை! இன்று என் மூளை வேலை செய்யவில்லை!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ்
நீக்குமீ,ராஜேந்திரன் என்கிற மீராவைச் சொல்கிறார் வவ்வால். நான் கவிதைகள் அதிகம் படிக்காததால் ஙே..!
பதிலளிநீக்குகணிப்பு சரியே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபின்னூட்டம் இட்டு வைத்தால் சரியான விடை வரும்போது இன்பாக்ஸிலேயே பார்த்துக் கொள்ளலாம்! ஹிஹிஹி... அப்துல் ரகுமான்?
பதிலளிநீக்குபாலகணேஷ் சார்! உங்கள் கணிப்பு சரியே அதனால் இப்போதைக்கு கருத்தை மறைத்து விட்டேன். நாளை வெளியிடுகிறேன்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
நீதியைச் சாற்றும் நெடுந்தமிழைத் தந்துவந்தீா்!
சோதியாய் மின்னும் சுடா்ந்து
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நன்றி ஐயா
நீக்குகவிஞர் மீரா
பதிலளிநீக்குசதியாக சொல்லி விடீர்கள்
நீக்குகவிதை வரிகள் அசாத்தியம்! ஆனால், யார் என்பது தெரியவில்லை!
பதிலளிநீக்குநல்லதொரு பகிர்வு!
விடை சொல்லிவிட்டேன்
நீக்குகவிஞர் மீரா
மூ.மேத்தாவின் வரிகள்
பதிலளிநீக்குதெரியலையே...சாதி கவிதை சிரிப்பை வர வைத்தது !
பதிலளிநீக்குஎனக்கு லட்டு புதிரை விட இது உண்மையிலேயே தலை சுத்துது சாமீ...!
பதிலளிநீக்குகவிஞர் முத்துநிலவன் ஐயாவிடம் விடையை கேட்டுக் கொள்கிறேன்... ஹிஹி...
கவிஞர் மேத்தா: அபதுல், ரகுமான்....
பதிலளிநீக்குகஷ்டமப்பா கண்டு பிடிப்பது . எல்லாம் நான் வாசிப்பதில்லை
நன்று ..நன்று.....
வேதா. இலங்காதிலகம்.
கண்டு பிடிச்சேன் கண்டுபிடிச்சேன்...அவர் சிவகங்கைகாரர்தான் !
பதிலளிநீக்குத ம 8
கவிதைகள் மூன்றும் அருமை.
பதிலளிநீக்குயார் என்று நாளை வந்து தெரிந்துக் கொள்கிறேன்....
யாராக இருக்கும் கூகுளில் கொடுத்தால் அது தங்களைத் தான் காட்டுகிறது
பதிலளிநீக்குஒரு வேளை கவிஞர் பெயரும் "மு" வில வருமோ? :)) மிகவும் ரசித்துப் படிக்க
வைத்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .
“ இல்லை கடவுள்......
பதிலளிநீக்கு...போத்தனூர்க் காவலர்
புலனாய்வு செய்கிறார்“ என்றலலவா அந்தக் கவிதை முடியும்? ஊசி ஊசியாகக் குத்தும் கவிதைகள்! என்னை மட்டும் சொல்லவேண்டாம் என்றதற்கு, எனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் யுவர் ஆனர்... இந்த முரளி அய்யாவுக்கு திரு மன்மோகன் சிங்கை தேர்தலில் ஆதரித்து ஒரு மாதம் பிரச்சாரம் செய்யும்படி தண்டித்திட வேண்டுமாய்ப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்..
ஹஹஹா எளிய தண்டனைதான். அவரைப் போலவே மவுனாகப் பிரச்சாரம் செய்வேன்.
நீக்குநல்ல கவிதைப் பகிர்வு..
பதிலளிநீக்குதிரு. மீரா அவர்களின் கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கும்...
நன்றி குமார்
நீக்குஅல்லா கவுஜையும் நல்லா கீதுபா...!
பதிலளிநீக்குகவிஞ்சரக் கண்டுகிற அளவுக்கு நமக்கு பொலமை கெடியாதுபா... இர்ந்தாலும், என்குத் தெர்ஞ்சத சொல்லிக்கிறேன்... இந்தக் கவுஜைலாம் எங்க கைல சொல்லிகினது நீகாண்டி தாம்பா...!
அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
தாங்க்ஸ் பா
நீக்குசாதி ஜாதி ரசித்தேன்.
பதிலளிநீக்குஉளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழ்ப்பற்று என்ற கவிதையில் உள்ள ஜாதிக்குப் பதிலாக சாதி என்ற கருத்து, உண்மையில் இதை எழுதியவரின் original சிந்தனை அல்ல. தமிழ்நாட்டுத் தமிழர் ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு ஈழத்தமிழர் குறுக்கிட்டு, “ஜாதி வேண்டும் அல்ல, சாதி வேண்டும் என்று திருத்தினார் என்பது, நகைச்சுவையாக ஈழத்தமிழர்கள் மத்தியில் பல வருடங்களுக்கு முன்பே பேசப்பட்ட பகிடி. அதைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறார் இதை எழுதியவர். தமிழ்நாட்டில் பிராமணர்கள் அல்லது சாஸ்திரிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களும் கூட, இன்றும் ‘ஜாதி’ என்று தான் சாதியை உச்சரிப்பதைக் காணலாம். ஆனால் ஈழத்தமிழர்களிடம் ஜாதி என்ற சொல்லே கிடையாது, எப்பொழுதுமே அது சாதி தான். :-)
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஇனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்
வலைச்சர தள இணைப்பு : சனிக்கிழமையின் சகாப்தங்கள்
கவிதைகள் அனைத்தும் நன்று!
பதிலளிநீக்குகடவுளைத் தேடி கவிதைக்கு விளக்கம் சொல்ல முயமுமா?
பதிலளிநீக்குகருத்து மோதல் சண்டையாகி ஒருவர் இன்னொருவரை கொலை செய்து விடுகிறார்.ஒருவர் உயிருடன் இல்லை. அதனல் அவர் போலிசில் மாட்டமல் இருக்க இன்னொருவர் தலைமறைவாகத் திரிகிறார்.
நீக்கு