சார்! என்ன எல்லாரும் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க. அப்படித்தான் எல்லார் கிட்டயும் பேர் வாங்கி இருக்கேன். அதுல என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா!நல்லவனா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்கு தெரியாது.
எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே நான் ரொம்ப நல்லவன் சார். சின்னவயசுல இருந்தே என்னை அப்படி வளத்துட்டாங்க. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா ஒரு நாள் ஹால்ல அரிசியை முறத்தில வச்சுட்டு துணி துவைக்க போய்ட்டாங்க. போறதுக்கு முன்னாடி "நீ ரொம்ப சமத்தாம். ரொம்ப ரொம்ப நல்ல பையனாம். . அரிசிய இறைக்காம விளையாடனும்"னு சொல்லிட்டு போனாங்க. அம்மா நல்லவன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது, ஆனா அரிசிய கையில எடுத்து ஹால் பூரா இறைச்சு விளையாடனும்னு ஆசையா இருந்தது. என்ன பண்றது என்ன நல்லவன்னு சொல்லிட்டாங்களே! என் ஆசைய அடக்கிக்கிட்டேன்.
எங்கப்பாவோட பிரண்டு ஒரு நாள் வந்தார் . ஒரு பொம்மைய வாங்கி எனக்கு பிரசன்ட் பண்ணார். அந்த பொம்ம எனக்கு பிடிக்கவே இல்லை. கீழ போட்டு உடைக்கலாம்னு நினைச்சேன். அப்பா அவர் எங்கப்பாகிட்ட சொன்னாரு "உங்க பையன் ரொம்ப நல்ல பையன்னு என் வைப் அடிக்கடி சொல்வா! என் பையன் இருக்கானே ரொம்ப மோசம் எந்த பொருளை கொடுத்தாலும் உடனே உடைச்சிடுவான்"
அவர் அப்படி சொன்னதும் நான் என்ன சார் பண்ண முடியும்? பொம்மைய தூக்கி போட்டு உடைக்கும் ஆசைய தூக்கி போட்டுட்டேன். புத்தகத்தை கிழிக்கனும் தண்ணியகொட்டணும், குளிக்கறதுக்கு அடம் பிடிக்கணும், ஓ ன்னு கத்தணும் இப்படி எல்லாம் செய்யணும்னுதான் நினைப்பேன்... ஊஹூம்
எனக்கு ஒரு தங்கை உண்டு சார். அவளை நைசா கிள்ளனும், முதுகில ஓங்கி அறையனும். அவ அழறத பாத்து சிரிக்கணும் நினைப்பேன். எங்க சார் அதெல்லாம் முடிஞ்சுது.? அக்கம் பக்கத்து வீட்டில இருக்கறவங்க எல்லாம் அவங்க பசங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடறதா எங்க அம்மாக்கிட்ட சொல்வாங்க. உங்க பசங்க பரவாயில்லையே ஒத்துமையா இருக்காங்களேன்னு பாராட்டுவாங்க. அதுக்காகவே சண்டை போடறதில்லை சார்.
வீட்டிலதான் இப்படின்னா ஸ்கூல்லயும் அப்படித்தான். நல்லவன்னா என்ன நெத்தியில எழுதி ஒட்டியா வச்சுருக்கும்? எங்க மிஸ்கூட அப்படித்தான் சொல்வாங்க. ஒருநாள் கிளாஸ்ல எல்லோருக்கும் டிக்டேஷன் குடுத்தாங்க. அதுல சிலதுல்லாம் எனக்கு தெரியல. சரி முன்னாடி இருக்கவன பாத்து எழுத எட்டிப் பாக்கலாம்னு நினச்சேன். இன்னொரு பையன் அவனுக்கு முன்னாடி இருந்த பையனை பாத்து எழுதிக்கிட்டிருந்தான், அதை பாத்துட்ட மிஸ் அவன் காதை திருகி அவன் கிட்ட என்னைக் கையா நீட்டி காமிச்சி, "அவனை பாரு! அவனுக்கு தெரியலன்னாகூட காப்பி அடிக்க மாட்டான். அவன மாதிரி நல்ல பையனா இருக்கணும்" னு சொன்னதுக்கப்புறம் காப்பி அடிக்க மனசு வரல சார் எனக்கு
பெரியவங்க இருக்கட்டும் என்கூட படிக்கிற பிரண்ட்சுங்க கிட்ட கூட எனக்கு நல்ல பேருதான் சார். நாங்கெல்லாம் கிரிக்கெட் மேட்ச் விளையாடுவோம். எதிர் டீம் பசங்ககூட என்ன நேர்மைய பாராட்டுவாங்க சார். பேட்ல லேசா பட்டு கேட்ச் புடிப்பாங்க. அது அவங்களுக்கே தெரியாது. அவுட் கொடுக்காமலே நானே வெளிய போய்டுவேன். இந்த மாதிரி மேட்சுல பேட்டிங் டீம்ல ஒருத்தர அம்பயரா நிப்பாங்க. யாரா இருந்தாலும் ரன் அவுட், ஸ்டம்பிங் அவுட் ஒத்தக்க மாட்டாங்க. நான் மட்டும் கரெக்டா அவுட் குடுத்த்துடுவேன். ஆப்பனன்ட் டீம்காரங்க நான்தான் அம்பயரா இருக்கணும்னு ஒத்தக்கால்ல நிப்பாங்கன்னா பாத்துக்கோங்களேன்.
காலேஜ் போற காலம் வந்துச்சு சார். என்கூட படிக்கிற பசங்க எல்லாம் ஜாலியா பொண்ணுங்க கூட அரட்டை அடிப்பாங்க கிண்டல் பண்ணி விளையாடுவானுங்க. லேடீஸ் காலேஜ் வாசல்ல சைட் அடிக்க போவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் என்னை கூப்பிட்டுக்கிட்டு போக மாட்டாங்க. எனக்கும் ஆசையாத்தான் இருக்கும் ஆனா என்னால அவங்கள மாதிரி என்னால இருக்க முடியாது.
அடிக்கடி கட் அடிச்சிட்டு பரங்கி மலை ஜோதியில சினிமா பாப்பானுங்க. அடுத்த நாள் அந்த சினிமாவைப் பத்தி பொண்ணுங்களோட பேசிக்கிட்டிருப்பாங்க. நான் பக்கத்தில போகும்போது நிறுத்திட்டு வேற மேட்டர் பேச ஆரம்பிச்சுடுவாங்க. ஆனாலும் இந்த பொண்ணுங்க ரொம்ப மோசம் சார். எங்கிட்ட பேசும்போது மட்டும் பாடத்தைபத்தி மட்டும்தான் பேசுவாங்க. நான் ரொம்ப நல்லவனாம் கன்னாபின்னான்னு பேச மாட்டேனாம். எப்படி இருக்கு பாருங்க சார். காலேஜ் லைப் இப்படியே முடிஞ்சு போச்சு .
அப்புறம் வேலை கிடைச்சது. அங்கயும் இதே கதைதான். நான் திறமையானவனாம் ரொம்ப பொறுமைமையானவனாம். என்கூடவேலை செய்யறவங்களும் அப்படித்தான் சொன்னாங்க.
சாருக்கு மட்டும் எப்படி கோவம் வராம இருக்குன்னு கேப்பாங்க. அப்புறம் எனக்கு எப்படி சார் கோவம் வரும்?
கல்யாணமாச்சு சார் எனக்கு. மாமியார் வீட்டில எனக்கு ரொம்ப நல்ல பேரு. ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுவாங்க. . என்ன சார் பண்றது. நல்லவனா இருந்துதானே ஆகணும் அப்புறம் என்மனைவிக்கும் என்மேல நல்ல அபிப்ராயம்னா பாத்துக்கோங்களேன்.நம்ப முடியல இல்ல? நம்பறதெல்லாம் நடக்காததும்,நம்பாததெல்லாம் நடக்கறதும்தனே வாழ்க்கை !
ஒரு நாள் நான் கம்ப்யூட்டர்ல ஒக்காந்து ஏதோ பண்ணிக்கிட்டிருந்தேன். என் மனைவியும் அவங்க பிரண்டும் ஹால்ல பேசிக்கிட்டிருந்தாங்க. "எங்க வீட்டுக்காரர் மாதிரி நல்லவர ரேராத்தான் பாக்க முடியும். எனக்கு வீட்டு வேலையில ரொம்ப ஹெல்ப் பண்ணுவார். லீவு நாள்ல டீ ல்லாம் போட்டு கொடுப்பார்" னு என் மனைவி சொன்னது என் காதில விழுந்தது.
அப்புறம் என்ன நடந்திருக்கும்னு நீங்க நினைக்கிறது சரிதான் சார். ஆமாம் நான் எப்படி சும்மா இருக்க முடியும். உடனே கிச்சனுக்குள்ள நுழைஞ்சு ரெண்டு பேருக்கும் டீ போட்டு எடுத்துட்டுப் போய் குடுத்தேன்.
இப்படியே காலம் போய்க்கிட்டிருந்தது. ஒரு நாள் ஆபீசில் இருந்து வீட்டுக்கு திரும்பினதும் டேபிள்ல 5 வது படிக்கிற என் பையனோட ரேங்க் கார்டு பாத்தேன். மார்க்கெல்லாம் குறைவா இருந்தது. எனக்கு கோவமா வந்தது. ரெண்டு சாத்து சாத்தனும். கையெழுத்து போடக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். எங்க பையனைக் காணோமேன்னு தேடினேன். வெளிய ரோட்ல அவன் ப்ரெண்டு கூட பேசிக்கிட்டிருந்தான் அவன் என்பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் "டேய்! எங்கப்பாகிட்ட ரேங்க் கார்டு இன்னும் காட்டலடா. நான் வாங்கி இருக்கிற ரேங்க்குக்கு என்ன செம அடி அடிப்பாருடா? உங்க அப்பா அடிப்பாரா" ன்னு கேட்டான். என் பையன்சொன்னான், "எங்கப்பா ரொம்ப நல்லவரு அடிக்க மாட்டாருன்னு.
அதை என் காதில கேட்டுட்டனே சார். அப்புறம் எப்படி நான் அடிக்க முடியும்? இன்னும் எவ்வளவோ இருக்கு சார் . எதை சொல்றது எதை விடறது.
என்ன உசுப்பேத்தி உசுப்பேத்தியே நல்லவனாக்கிட்டாங்க சார். வேற வழியில்ல இனிவாழ் நாள் முழுசும் நல்லவனா இருக்கவே முடிவு செஞ்சிட்டேன். என்ன சார் சொல்லறீங்க?.
******************************************************************************************
குறிப்பு: இதில் வரும் நான் நானில்லைங்க. முற்றிலும் கற்பனைதான். நான் பொய் சொல்ல மாட்டேன்னு உங்களுக்கே தெரியும். ரொம்ப நல்லவங்க . ஹிஹிஹி
*******************************************************************************
படித்து விட்டீர்களா?
******************************************************************************************************படித்து விட்டீர்களா?
நானாக நான் இல்லை என்று நீங்கள் பாடினாலும் ,நல்'வாக்கு 'தந்தேனே நானே ன்னு பதிவை ரசிக்க வைத்து பாட வைத்து விட்டீர்கள் !
பதிலளிநீக்குத ம 1
ஹி...ஹி நல்லவன் மாதிரி நடிக்க கத்துக்கணோம் :-))
பதிலளிநீக்குஎல்லோருக்கும் நல்லவனாக இருப்பது மிகவும் சிரமமான செயல்..
பதிலளிநீக்குஆனால் முடிந்தவரையில் இருக்கவே எல்லோரும் முயற்சிக்கிறோம்..
சில இடங்களில் மனமே இல்லை என்றாலும் நல்லவனாக
நடித்துத்தான் ஆகவேண்டி இருக்கிறது..
அருமையான பதிவு நண்பரே..
ரசித்தேன். கஷ்டமான காரியம் என்பதையும் புரிந்தேன். உணர்ந்து செய்தால் கஷ்டம் இல்லை.நல்லவனாக நடிப்பது என்பது கஷ்டம் தானே.
பதிலளிநீக்குநன்றி தொடர வாழ்த்துக்கள்....!
எல்லோருக்கும் நல்லவராக நடந்து கொள்வதைவிட கடினமான காரியம் வேறொன்றுமில்லை.
பதிலளிநீக்குநன்றி ஐயா
த.ம.3
என்னைப்பற்றிய உண்மையை நீங்கள் எழுதிவிட்டீர்களோ என்று நினைக்க தோன்றியது அப்பறம்தான் தோன்றியது நீங்களும் என்னைப் போல உள்ள ஒரு நல்லவர் என்று..
பதிலளிநீக்குஎன் முக ராசியோ என்னவோ எல்லோரும் என்னை நல்லவனாக நம்புகிறார்கள் அதற்காகவே நல்லவனாக நடிக்க வேண்டியிருக்கிறது சில சமயங்களில் இந்த நல்லவன் பட்டம் எனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு கெட்டவனாக ஆகிவிடலாம் என்று நினைத்தாளும் ஏதோ தடுக்குங்க முரளீ
இப்பிடி அநியாயத்துக்கு நல்லவனா இருந்தா எப்பிடி ?
பதிலளிநீக்குநீங்க நல்லவன்னு தெரிஞ்சிபோச்சு சரி, ஒரு ரெண்டு லட்சம் ரூபாய் கடன் வேணும் தாங்க.
ஹி ... ஹி ...ஹி ...
பதிலளிநீக்குஇந்த நல்லவன் 'இமேஜை' காப்பாத்த எல்லோருமே ரொம்ப மெனக்கெடுகிறோம். சில நேரங்களில் தர்மசங்கடமாய் நம் இயல்பைத் தொலைக்கின்றோம்.
பதிலளிநீக்குநீங்க ரொம்ப ... ரொம்ப ... நல்லவர்தான் சார். அதனால்தான் நிறையபேர் உங்கள் படைப்புகளை ரசிக்கிறார்கள்!
பதிலளிநீக்குஹா... ஹா... நல்லவனுக்கு தான் எத்தனை சோதனைகள்...!
பதிலளிநீக்குஇரு பாடல்கள் ஞாபகம் வந்தன...
நல்லவன் எனக்கு நானே நல்லவன்...
சொல்லிலும் செயலிலும் நல்லவன்...
ஆனால்...
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்...
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்...
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்...
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்...
கடவுள் ஏன் கல்லானான்...?
மனம் கல்லாய் போன மனிதர்களாலே...
ச்சே... இந்த நல்லவங்களுக்கு வர்ற சோதனை... பாவம்தான் நீங்க!
பதிலளிநீக்குநானும் நல்லவன்தான் முரளி!
பதிலளிநீக்குநல்லவராவே தொடர வாழ்த்துக்கள்! உங்களைப்போலவே பலர்! அவர்கள் சொல்லிக்கொள்வதில்லை! நீங்கள் சொல்லிவிட்டீர்கள்! அவ்வளவுதான்! நன்றி!
பதிலளிநீக்குஉங்களை நல்லவராக்கிய அனைவருக்கும் நன்றி. மனசில் தோன்றுவதை அப்படியே பகிர்ந்து கொள்கிறீர்களே.
பதிலளிநீக்குஐயா! இது புனையப்பட்ட சிறுகதை . யாராவது இதை கதை என்று உணர்ந்தார்களா என்று தெரியவில்லை கதை சொல்லும் உத்தியாகவே தன்மை இல் சொல்வதாக அமைத்தேன்.
நீக்குரொம்ப நல்லவனா இருக்கிறதும் கஷ்டம்தான் போல...
பதிலளிநீக்குஎம்புட்டு வருத்தத்தை அடக்கி வச்சி சொல்ல வேண்டியிருக்கு....
நல்ல வேளை இவரு ரொம்ப நல்லவரு எதையுமே மனசுக்குள்ளதான் வச்சுப்பாருன்னு யாராவது சொல்லியிருந்தா இங்க எழுதியிருக்கக் கூட மாட்டீங்க உங்க கதையை... உங்க கதையின்னா கற்பனைக் கதையை அண்ணா...
முரளி அருமையான கதை (அ) புனைவு (அ) உண்மை நிகழ்வு.... இப்படி எதுவாகிலும் இருக்கட்டும்....படிக்கும் போது ஒவ்வொரு வரிகளிலும் படிக்கும் எல்லோருக்குமே ஏதாவது சில வரிகள் ஒத்ததாய் தோன்றியிருக்கும்.. எனக்கு பல வரிகள் தோன்றியது... நம் குணம் உருவாக நம் மீதான நம்பிக்கை வார்த்தைகள் தான் காரணம் என்றாலும் , சில குழந்தைமைகளை இழந்து விட்டோமே என வருந்தவும் வைக்கிறது... அழகான பார்வை.
பதிலளிநீக்குநல்ல முடிவு தான் .
பதிலளிநீக்குஇனிய லாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
பிரமாதம் சார். சர்க்கரை பந்தலில் தேன் மாரி பொழிந்தாற் போன்ற அழகான எழுத்து நடை . வாழ்க வளர்க.
பதிலளிநீக்குகரு.சந்திரா
வாலிநோக்கம்
முரளி நானும் நல்லவந்தான் இப்போ ஏதாவது பரிசுக் கொடுத்தா உடைக்காம பாத்திரமா வைச்சுக்கிறேன்
பதிலளிநீக்குநான் ரெம்ப நல்லவன்..... :)
பதிலளிநீக்குரசித்தேன்.
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html
வணக்கம்
பதிலளிநீக்குஇன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நீங்கள் உண்மையில் நல்லவர்தான் அண்ணாச்சி.
பதிலளிநீக்குபின் குறிப்பை பார்த்தபின் தான் நீங்க எவ்ளோ நல்லவருன்னு தெரிஞ்சது !!
பதிலளிநீக்குஎன்ன அண்ணா ஆபிஸில் ஆணிகள் அதிகமாயிட்டா ? பதிவுகளையே காணலையே.
பதிலளிநீக்குநடனசபாபதி
ஆமாம் சபாபதி.அலுவலக வேலை மற்றும் கணினி சிக்கல் காரணமாக எழுத முடியவில்லை
நீக்குஇப்படித்தான் எல்லோரும் நல்லவர்கள் ஆனார்களா? அப்படி என்றால் நல்லவர்கள் உருவாக சுற்றமும் சூழலும் காரணம் இல்லையா
பதிலளிநீக்குநல்ல கற்பனைங்க ..
பதிலளிநீக்குசிரிப்பு தாங்கல...
http://www.malartharu.org/2014/02/lady-love-lace-ada.html
நான் கூட நெசாமவெ நம்பிட்டேன்.
பதிலளிநீக்குஇன்னாடா, இவன் கட்டின பொண்டாட்டி மட்டும் இல்ல,
பெத்த புள்ளைட்ட கூட இல்ல நல்லவன் அப்படின்னு
பேரு வாங்கிட்டான் . தல கிரு கிரு ன்னு சுத்தி போயிடுச்சு.
இவரை ஒரு பொஸ்தகம் " நல்லவனாவது எப்படி ?"
எழுதச் சொல்லி, அதுக்கு ஆவிப்பாவை பொம்மை செலக்ட் செய்யச்சொல்லி, வாத்தியாரை டிசைன் செய்யச்சொல்லி,
அந்த கே.கே. நகர் லே இருக்கிற பதிப்பகத்துலே பப்ளிஷ்
பண்ணி, அன்னிக்கு ஒரு கூட்டம் போட்டு ,
பெஞ்ச் போட்டு, சேர் போட்டு, அம்பது பேருக்கு காபி போட்டு,
அய்யாவை விட்டு வெளியிடலாமே என்று யோசனை சொல்ல உங்க
அலை பேசி நம்பரை என் செல்லிலே போடும்போது தான் கவனிச்சேன்.
எல்லாம் உடன்சாய்யா?
தப்பிச்சேன்.
இருந்தாலும்,ஒன்னு, நல்லவன் அப்படின்னு எல்லாரையும்
நம்பசெய்வது எப்படி ? எழுதுங்க.
ஐயையோ... நாலு வார்த்தை தானே நல்லதா எழுத .சொன்னாரு .
நான் நானூறு வார்த்தை எழுதிட்டேனே...
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
சூப்பர் ... ரசித்தேன்...!
பதிலளிநீக்குநான்கூட, ரொம்ப நாளாக என்னை மாதிரி நல்லவர் யாரும் இல்லையே?! என்கிற வருத்ததில் இருந்தேன். அந்த வருத்ததிலேயே "வருத்தப்படும் வாலிபர் சங்கம்' னு ஆரம்பிச்சு அதன் நிரந்தர (மன்னிச்சுக்குங்) நிறுவன தலைவர் ஆக செயல்படலாமான்னு இருந்தேன். நல்லவேளை இப்ப என்னை மாதிரியே உள்ள இன்னொருத்தரை கண்டு பிடிச்சாச்சு.
பதிலளிநீக்குநான்கூட, ரொம்ப நாளாக என்னை மாதிரி நல்லவர் யாரும் இல்லையே?! என்கிற வருத்ததில் இருந்தேன். அந்த வருத்ததிலேயே "வருத்தப்படும் வாலிபர் சங்கம்' னு ஆரம்பிச்சு அதன் நிரந்தர (மன்னிச்சுக்குங்) நிறுவன தலைவர் ஆக செயல்படலாமான்னு இருந்தேன். நல்லவேளை இப்ப என்னை மாதிரியே உள்ள இன்னொருத்தரை கண்டு பிடிச்சாச்சு.
பதிலளிநீக்குஎழுத்துருவின் வடிமைப்பை சற்று மாற்ற முடியுமா? என்று பாருங்கள்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி ஜோதிஜி சார். எழுத்துருக்கள் எப்படித் தெரிகின்றன. தெளிவின்றி சிறியதாக தெரிகிறதா? அல்லது பெரியதாக தெரிகிறதா. ? பிற கணினிகளில் எப்படி காட்சி அளிக்கிறது என்பது தெரிந்தால் மாற்றம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும். தொடர் சிக்கல் காரணமாக கணினி மதர் போர்டு மற்றும் பிராசசர் மாற்றி உள்ளேன். அதன் காரணமாக திரையின் தெளிவுத் தன்மை எனது கணினித் திரைக்கு ஏற்ப மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது.கடந்த ஒரு மாத காலமாக வலைப் பக்கங்களில் உலாவ முடிவதில்லை. பிற கணினிகளில் பார்த்துவிட்டு சரி செய்ய முயற்சிக்கிறேன். சில நேரங்களில் குறைகள் சுட்டிக் காட்டப்படாததால் அவை நான் அறியாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.அவ்வகையில் ஆலோசனை கூறியதை வரவேற்கிறேன். மிக்க நன்றி
நீக்குபடிக்கும் போது ஒன்றும்பிரச்சனை இல்லை. ஆனால் படிப்பதற்கு சோர்வாக காட்சியளிக்கக்கூடிய (அழுது வடிகின்ற) அமைப்பு போலவே உள்ளது. உங்கள் தலைப்பு போல கொஞ்சம் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
நீக்குஎனது கணினியில் உங்கள் பதிவு சரியாகவே -போதிய அளவிற்குப் பெரிதாகவே- இருக்கிறது. பின்னூட்டம் சிறிய எழுத்தில் தெரிகிறது. ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால்,.. ஏன் முரளி அய்யா இவ்வளவு தாமதம் அடுத்த பதிவிற்கு? தேர்வுப் பணியா அல்லது தேர்தல் பணியா? பின்ன என்ன காரணமா ஆளே காணோம்? “பிரபல பதிவரைக் காணவில்லை“ ன்னு என் பதிவில போடவா? இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பதிவு போடலன்னா... ஆமா சொல்ட்டேன்...
பதிலளிநீக்குஅலுவலகப் பணிமாற்றம் மற்றும் எதிர்பாரா சிக்கல்களால் எழுத இயலவில்லை. விரைவில் வருவேன். நினைவில் வைத்து கேட்டதற்கு மிக்க நன்றி ஐயா
பதிலளிநீக்குதாங்கள் பொறுப்பானவர் என்று தங்களின் எழுத்திலேயே தெரியும். விரைவில் எல்லாம் முடித்து, மீண்டு வாருங்கள். காத்திருக்கின்றேன்(றோம்)
நீக்குவெகு நாட்கள் கழித்து எழுதினாலும் அருமையா எழுதியிருக்கீங்க. எப்பவுமே கதை எழுதறப்போ first person singular அதாவது 'நான்' என்று நமக்கு நடந்ததைப் போல் எழுதினாலே பலரும் அது உண்மை சம்பவம் என்பதுபோல் எடுத்துக்கொள்வார்கள். இது இயற்கைதான்.
பதிலளிநீக்கு