என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 10 அக்டோபர், 2013

தமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடியுமா?

 இது புதியவர்களுக்கு
ஒரு பதிவு நிறையப் பேரை சென்றடைவதற்கு திரட்டிகள் உதவுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே! இதில் தமிழ்மணம் தமிழ் 10 இன்டலி முதலியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. திரட்டிகளின் உதவியின்றி அதிகப் பார்வையாளர்களைக் கொண்ட வலைப் பதிவுகள் மிக சொற்பமே. திரட்டிகளில் இணைக்கப் படவில்லை என்றாலும் எழுத்துலகப் பிரபலங்களான எஸ்.ராமகிருஷ்ணன்,சாரு நிவேதிதா, ஜெய மோகன் போன்றவர்களின் பதிவுகள் அதிக விமர்சனங்களுக்கு உள்ளானாலும் நிறையப் பேரால் படிக்கப் பெற்றுவிடுகின்றன. 

  தமிழ்மணம் மீது விமர்சனங்கள் பல இருந்தாலும் பலருக்கு பதிவுகளை கொண்டு சேர்ப்பதில் குறிப்பிடத் தக்க பங்கு வகிக்கிறது என்பது உண்மையே!அதற்கு முக்கிய காரணம் அது பதிவை எளிமையான முறையில் திரட்டுவதே!
   திரட்டுவதோடு மட்டுமல்லாமல் பதிவுகளின் இணைப்பை முகப்பு பக்கத்தில் பல வகைகளில் காட்டுவதும் ஒரு காரணம். பதிவு இணைக்கப் பட்டவுடன் பின்னர் ஏழு ஒட்டு பெற்றால்( இரண்டு நாட்களுக்குள்) அதை தெரிவிக்கும். அது மட்டுமின்றி குறிப்பிட்ட  lable களுக்கு கீழும் பதிவுகள் அடுத்தடுத்து அதே லேபிளில் வரும் வரை காட்சியளிக்கிறது. நாம் இடும் குறி சொற்கள்(lable) தமிழ் மணம் வகைப் படுத்தும், அரசியல் சமூகம், நிகழ்வுகள் நகைச்சுவை, நையாண்டி,சினிமா,விமர்சனம்,புனைவுகள், கவிதை.சிறுகதை சமையல் குறிப்பு, என்ற பிரிவுகளில் அமைந்தால்  அவற்றின் கீழ் பதிவுகள் இடம் பெறும் மேலும் பதிவிற்கு ஒரு மறுமொழி(பின்னூட்டம்,கருத்து) கிடைத்தாலும் அந்தப் பதிவின் தகவலும் ஒருபுறம் காண முடிகிறது. இதோடு ஒரு நாளில் அதிகமாகப் பார்க்கப்பட்ட முப்பது இடுகைகள், ஒரு வாரத்தில் பார்க்கப்பட்டவை, என்று பல்வேறு வகைகளில் ஒரு பதிவரின் பதிவுகள் கண்ணில் படுவதால் தலைப்பு ஈர்க்கும் பட்சத்தில் வாசகர் வருகை தருகின்றனர். இது மட்டுமல்லாது தமிழ் மணம் மகுடம் என்று இரண்டு நாட்களில் அதிக வாக்குகள் பெற்றபதிவும் வெளியிடப் படுகிறது. (இது தொடர்பாக சர்ச்சைகளும் உண்டு .)
அது மட்டுமல்லாமல் ஒரு தரவரிசைப் பட்டியலை(இதில் பின்பற்றப் படும் முறை கிரிக்கெட்டின்  டக் வொர்த் லூயிஸ் முறை போல புரியாததாகவே இருக்கிறது )  வெளியிட்டு ஒரு சுவாரஸ்யத்தையும் போட்டியையும் ஏற்படுத்துகிறது. என்னதான் ஓட்டைப் பற்றி கவலைப் படமாட்டேன். தர வரிசையை பற்றி கவலைப் படமாட்டேன் என்று சொல்லும் பிரபலங்களும் தமிழ்மணத்தில் இணைக்கத் தவறுவது இல்லை. சில பதிவர்கள்(வளரந்தபின்) பதிவுக்கு  ஓட்டளிப்பதையும் கருத்திடுவதையும்  கௌரவக் குறைவாகக் கருதுகிறார்கள். இங்கு கருத்திடுபவர்களும் வாக்களிப்பவர்களும் பெரும்பாலும் சக பதிவர்கள் என்பதால் பரஸ்பர அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது இயல்பானதே! நீண்ட நாட்களாக எழுதி வரும் பதிவர்கள் சிலருக்கு பதிவுக்கு வாக்களிப்பது என்பதை அறியதவர்களாகக் கூட இருக்கிறார்கள் சிலர்  ஆர்வம்காட்டுவதும் இல்லை. 

  நமது  பதிவுகளுக்கு தமிழ்மண வாக்குப் பட்டை மூலம் வாக்களிப்பவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள நாம் விரும்பலாம். அது முடியுமா என்றால் முடியும். ஆனால் அவர்களின் மெயில் Id அல்லது பயனர் பெயர் தான் அறிந்து கொள்ள முடியும். என்றாலும் சில நேரங்களில் அவர்களுடைய பெயருக்கும் மெயில் ஐடிக்கும் தொடர்பு இருக்காது. இருந்தாலும் அதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
தமிழ்மணத்தை பொறுத்தவரை ஒரு பதிவுக்கு ஒருவர் ஆதரவாகவோ அல்லது  எதிராகவோ வாக்களிக்க முடியும்.  சர்ச்சைக்குரிய அரசியல்,மத சார்பான, சமூக,சினிமா பதிவுகளுக்கு எதிர் வாக்குகள் இடப் படுவது உண்டு.
ஏழு பேர் உங்கள் பதிவுக்கு வாக்களித்துவிட்டால்அப்பதிவு முகப்புப் பக்கத்தில்வாசகர் பரிந்துரையில் பகுதியில் இடம்பெறும்
இதோ கீழுள்ளபடத்தை கவனியுங்கள்.


உயர்த்தப்பட்ட கட்டை விரல் படத்தை கிளிக்  செய்தால் அந்தப் பதிவிற்கு வாக்களிக்கத்தவர்களின் ஈமெயில் முகவரி அல்லது தமிழ்மணத்தில் அவர்களின் பயனர் பெயர் இருப்பதை காணலாம். மேலுள்ள பதிவில் கவியாழி கண்ணதாசன் 7 வாக்குகள் பெற்றிருக்கிறார்.
இதோ அவருக்கு வாக்களித்தவர்கள்

ஏழு வாக்குகள் பெற்றால் மட்டுமே இவ்வாறு பார்க்க முடியும்

இதை விட குறைவாக இருந்தால் எப்படிப் பார்ப்பது? அதற்கும் வழி உண்டு. தமிழ் மணம் ஒவ்வொரு பதிவிற்கும்( இணைக்கும்போது) ஒரு ID எண் வழங்குகிறது.அந்த அடையாள எண்ணை அறிய தமிழ்மண உங்கள் பதிவின் ஓட்டுப பட்டையின் மீது மௌஸை வைத்தால் ஸ்டார்ட் பட்டனுக்கு மேலே இடது கீழ்ப்புறத்தில் கேழ்க்கண்டவாறு காட்சி அளிக்கும். மௌஸை எடுத்தால் மறைந்து விடும்.இதில் கடைசியில் உள்ளதே பதிவுக்கு தமிழ் மணத்தால் வழங்கப்பட்ட  அடையாள எண்ணாகும்.இணைப்புப் பட்டையைக் கிளிக் செய்தலும் அட்ராஸ் பாரில் அடையாள எண்ணைக் காணமுடியும்
இந்த அடையாள எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும். பின்னர் 
http://tamilmanam.net/who_voted.php?id= 
என்ற முகவரியை அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து கொண்டு =  பக்கத்தில் பதிவின் அடையாள எண்ணை டைப் செய்து  எண்டர் விசை கொடுத்தால் ஒட்டளித்தவர்களை அறியலாம்.
யாருடைய பதிவாக இருந்தாலும் இந்த விவரங்களை பார்க்கமுடியும்.

இதே போல தமிழ் 10 லும் நாம் இணைத்துள்ள வோட்டுப் பட்டை மூலம் உள் சென்று நமக்கு யார் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை  அறிய முடியும். தமிழ் 10 இல் பதிவுகளை இணைப்பவர்கள் கட்டாயம் குறைந்தது ஏதேனும் 3 பதிவுகளுக்கு வாக்களிக்க வேண்டும். இதில் காத்திருப்புப் பட்டியலில் இருந்து பதிவுகள் வெளியாவதற்கு குறைந்தது 11 வாக்குகள் பெற வேண்டும்.


இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து உங்கள் வலைப் பக்கத்திற்கு வரும் நண்பர் பதிவுக்கு வாக்களிக்க வில்லையே என்று வருத்தப் பட வேண்டாம். அனைவரும் பொறுமையாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது. அவர் நமது பதிவுக்கு ஒட்டு போடவில்லையே நாம் அவரது பதிவுக்கு ஒட்டுபோடக்கூடாது என்று நினைக்கவும் வேண்டாம்.திரட்டிகளில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஒரு சிலருக்கு திரட்டிகளில்  இணைக்க மட்டும்தான் அறிந்திருப்பார்கள்.  நாமும் மற்றவர்களுக்கு வாக்களிக்கலாம் என்பது தெரியாதவர்களும் உண்டு. 

என்னதான் இவையெல்லாம் ஒரு பதிவை ஹிட்டாக்க உதவும் என்றாலும் தொடர்ந்து வாசகர் வருகை தர  பதிவுகள் தரமாக இருக்க வேண்டியது அவசியம்.

*************************************************************************
கொசுறு: சிலரது   வலைப்பூக்களில் தமிழ்மண ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்வதில்லை. பெரும்பாலும் blogspot.in ஐ blogspot.com ஆக மாற்றும் நிரலை இணைத்தால்ஓட்டுப் பட்டை வேலை செய்யத் தொடங்கும். 
அதற்கான வழி முறைகளை  நானும் எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவு அலெக்சா தர வரிசையில் பின்னிலை ஏன்?

பொன்மலர் அவர்களின் பதிவை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html 
பிரபல  தொழில் நுட்பப் பதிவர்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள். 
விருப்பம் உள்ளவர்கள் முயற்சித்துப் பாருங்கள். நானும் உதவ தயாராக இருக்கிறேன். 
திண்டுக்கல்  தனபாலனும் பலருக்கும் ப்ளாகர் தொழில் நுட்ப சிக்கல்களை தீர்க்க உதவி இருக்கிறார். அவரையும் தொடர்பு கொள்ளலாம்.

*******************************************************************************

50 கருத்துகள்:

  1. கடைசிவரிகள் தான் உண்மை ஐயா.,நானும் இதுவரை யாருக்கும் ஓட்டுப் போட்டது கிடையாது..மாசம் ஒரு பதிவு எழுதறதுக்கே வீட்டுல பர்மிஷன் வாங்கவேண்டி இருக்கு.இதுல ஓட்டுப் போட எங்க நேரம் இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு நண்பரே..
    நாம் எழுதும் எழுத்துக்கள் அனைவரும்
    வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் எழுகையில்....
    விழும் ஓட்டுகளை மனம் தானாக தேடும்....
    அதையும் தாண்டி நல்ல பதிவுகள் தரவேண்டும்
    என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்
    நிதர்சனம்...

    பதிலளிநீக்கு
  3. புதிய அறியாத தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. நான் படிக்கும் பதிவுகளுக்கு ஓட்டுப் போட்டு விடுகிறேன். நேரம் செலவழித்து அதை எழுதி வெளியிடும் நண்பர்களுக்கு இது கூடச் செய்யவில்லை என்றால் எப்படி?! எங்கள் பதிவுகளையும் தமிழ்மணத்தில் இணைக்கிறோம் என்றாலும் ஓட்டுப்பட்டை எங்களுக்கு வருவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம், உங்கள் ஒட்டு நான் உட்பட பலருக்கும் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்பதை அறிவேன். உங்கள் வலைப்பதிவில் ஓட்டுப் போட முடிவதில்லை. சில டெம்ப்ளேட்டுகளில் தமிழ்மண இணைப்புப் பட்டை சரியாக வேலை செய்வதில்லை. .blogspot.in என்பதை blogspot.com ஆக்கும் நிரலை இணைத்தால் வேலை செய்யும்

      நீக்கு
    2. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

      நீக்கு
  5. தமிழ் மணத்தில் ஏழு வாக்குகளுக்கு குறைவாகப் பெறும்போது வாக்களித்தவர்கள் பெயரை அறிந்து கொள்வது என்று தெரியப்படுத்திய சகோதரருக்கு நன்றி! இனிமேல்தான் அந்த முறையை சோதித்துப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. பலரும் அறிந்து கொள்வார்கள்... முடிவில் மிகவும் அவசியமான கருத்து...

    பதிலளிநீக்கு
  7. rompa alaka eliya nadaiyila vilakki soninga ... intha visayam na therinjukka oru 2 alalthu 3 matham pidithu irukkum.. sir.. thodarnthu ninga puthiya pathivarkalukku use full aa ana visayangal ithu pola pakirungal sir. kadaisi vari sariya soninga sir..

    பதிலளிநீக்கு
  8. பதிவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  9. பதிவர்கள் அறிந்திருக்க வேண்டிய தகவலை
    அருமையாக விரிவாக பதிவிட்டமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. எனக்கும் திரு தனபாலன் .in என்பதை .com - ஆக மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். அவ்வளவு தொழில்நுட்ப அறிவு இல்லை. அவரிடமே கேட்டு செய்து கொள்ளவேண்டும். ஒரொரு சமயம் இது தேவையா என்று தோன்றும். அதனால் பேசாமல் இருந்துவிடுவேன். திரு ரமணி அவர்கள் எல்லோருக்கும் ஓட்டு போடுவதைப் (அவரவர்கள் தளத்தில் அவர் தெரிவிப்பதை) பார்த்திருக்கிறேன்.
    கொஞ்சம் பொறுமையாகப் பண்ணலாம். ஏனோ மனசு வேண்டாம் என்கிறது. மற்றவர்களுக்காவது ஓட்டுப் போடுகிறேன், இனிமேல்.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பதிவும் மேலும் கீழும் ஆடிக்கொண்டே இருக்கிறது. டிடி அவர்கள் கூறியதுபோன்று நீங்களும் மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கும் சமீபத்தில்தான் அவர்தான் in லிருந்து .com மாற்றுவதற்கு உதவினார். சிலர் பல ஐடிக்களை வைத்துக்கொண்டு தங்களுக்கு தாங்களே ஓட்டளிப்பதும் உண்டு என்கிறார்களே அது சாத்தியமா? ஏனெனில் சில பதிவுகளில் கருத்துரைகளை விட ஓட்டுகள் அதிகம் தென்படுகின்றனவே அதனால் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! நான் கடந்த ஆண்டே மாற்றி விட்டேன். என் கணினியில் நன்றாகத்தானே தெரிகிறது. வேறு கணினியிலும் பார்த்தேன் அதிலும் தெளிவாக வே தெரிகிறதே! ஒருவேளை அப்படி ஆடினாலும் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சார்.
      ஒருவர் பல ஐ.டி க்களை வைத்துக் கொண்டுவாக்களித்துக் கொள்ள முடியும். அப்படியும் சிலர் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டை (ஒரு ஒட்டு மட்டும்) நீங்கள் போட்டுக் கொள்ளாலாம் அதில் தவறு இல்லை.

      நீக்கு
  12. சுவாரஸ்யத் தகவல்கள்! தமிழ் மணத்திலிருந்து விலகியிருப்பதால் இது குறித்து நான் சிரத்தை எடுத்துக் கொள்வது இல்லை! நம் பதிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்வதில் திரட்டிகளின் பங்கு மிகவும் முக்கியமானதுதான்! நல்லதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரட்டிகள் இன்றியே பல வாசகர்களை பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சுரேஷ்

      நீக்கு
  13. எனக்கும் ஓட்டு பற்றி நீங்கள் சொல்லிதான் தெரிந்தது. ட்ராபிக் ரேங்க் பற்றியும் நீங்கள் சொல்லிதான் அதை ஆர்வமுடன் என் பக்கத்திலும் இணைத்தேன்... அதிகமாக பதிவுகளை தொடர்ந்து கொடுத்து கொண்டிருப்பதும் வருகையாளர்களை பொறுத்தும் ரேங்க் மாறுகிறதே தவிர அது படைப்பின் ஆக்கத்திற்காக அடையும் வெற்றி இல்லை.. என்று புரிந்ததும்... அந்த அடையாள பட்டியை நீக்கிவிட்டேன். ஓட்டு, ப்ளாக் ரேங்க் இதில் எனக்கு விருப்பமில்லை. கொடுத்து வாங்குவதுதான் ஓட்டு, ரேங்க் இதெல்லாம்...! என்னை பொறுத்தவரை எழுத்துக்கள் வாசிப்பவர்களை மனதில் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தி சென்றால் போதும். அதுவே நம் எழுத்துக்கான வெற்றி!
    திரட்டி என்பதை முகவரிகளை உள்ளடக்கிய தகவல் புத்தகமாய் செயல்படுவதால் திரட்டிகளின் பணி நல்ல விஷயம்தான்!

    //சக பதிவர்களின் பரஸ்பர அங்கீகாரத்தை எதிர் பார்ப்பது இயல்புதான்// - அதற்காக 20 பேருக்கு கருத்தளித்து விட்டு நம் பக்கத்திற்கும் 20 பேர் கருத்தளிக்க வேண்டும் என்று எண்ணிகொண்டிருந்தால் அவ்வளவுதான்... வேறு வேலையே செய்ய முடியாது... எப்போதும் இணையத்திலேயே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்... வாசிப்பு என்பது கட்டாய விஷயமாக இருக்க கூடாது... நமக்கான நேரத்தில் நாம் விரும்பி ரசிப்பது..! எல்லோருடைய எழுத்துக்களையும் யாரோ ஒருவர் அவருக்கான நேரத்தில் அதை ரசித்து வாசித்து கொண்டிருப்பர். எனவே ஓட்டு, ரேங்க் இதெல்லாம் விடுங்க... எல்லோருமே நல்ல எழுத்தாளர்கள்தான்... !
    ஓட்டளிப்பதையும், கருத்தளிப்பதையும் கௌரவ குறைச்சலாக சிலர் நினைக்கின்றார்கள் என்று நீங்கள் சொல்வதை என்னால அந்த கோணத்தில் நினைக்க முடியவில்லை.. தவழும் குழந்தைக்கு நிற்கவும், நடக்கவும் கைதட்டி உற்சாக படுத்துகிறோம்... அது நன்றாக ஓட ஆரம்பித்த பின் அதற்கு நம் கைதட்டல் அவசியமிருக்காது அல்லவா? எனவே புதியவர்களுக்கு வாக்களித்து உற்சாகப்படுத்தலாம் ..!

    நான் என் பதிவுகளுக்கு வருபவர்கள் பதிவுகளைத்தான் படிப்பது கருத்திடுவது என்று எப்போதும் நினைத்ததில்லை.... என் வேலையின் இடையே ரசிக்கும் எதாவது ஒரு பக்கத்தை படித்துவிடுவேன்... உதாரணத்திற்கு " சிட்டுக்குருவி" வலைப்பக்கம் எழுதும் விமலன் சார் அன்றாட நிகழ்வுகளையே அத்தனை ரசனையாக ரசித்து எழுதுகிறார்.. கருத்திட்டு நான் படித்ததை அடையாளப்படுத்தவில்லையே தவிர அடடா.. ஒரே மாதிரியாக இருந்தாலும் நாளும் நாளும் சின்ன நிகழ்வுகளை இப்படி ரசித்து எழுத முடியுமா என்று வியப்படைவேன். அதனால் கருத்திடுவது பெரிய விஷயமில்லை... ரசிக்கபடுதல் போதுமானது!

    ஏன் என்ன ஆச்சு... இப்படி ஓட்டு பற்றி...? புஷ்பா மாமியின் புலம்பல்கள் என்ற சமூக அக்கறை கொண்ட உங்கள் எழுத்து எங்கோ இருக்கும் என்னை உங்கள் ரசிகை ஆக்கிற்றே ...! இத்தனைக்கும் எனக்கு தமிழ் மணம் பற்றி கூட அப்போது தெரியாது...! என்னை பொறுத்தவரை நீங்கள் நல்ல சிந்தனையாளர்! நிறைய நல்ல விஷயங்களை எழுதுங்க.. புஷ்பா மாமியை பார்த்து ரொம்ப நாளாச்சு....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரிக்கு,
      இந்தப் பதிவு எனது பதிவுகளுக்கு வாக்கை எதிர்பார்த்து அல்ல.நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டதாலும புதியவர்களுக்கு உதவக் கூடும் என்பதால்தான் இதை எழுதினேன். நாம் அளிக்கும் வாக்கு பல புதிய திறமையான பதிவர்களை அடையாளம் காட்ட உதவும். நான் எந்த வலைதளத்திற்கு சென்றாலும் புதியவர்களாக இருந்தாலும் நிச்சயம் வாக்களித்துவிட்டுத்தான் வருவேன்.எனக்கு பிடிக்கும் பதிவுகளுக்கும் வாக்களிப்பேன்.நான் தெரிந்து கொண்டதை எழுத வேண்டும் என்ற ஆர்வம காரணமாகவே இழந்தது இப்பதிவு. ஓராண்டுக்கு மேலாக draft இல் இருந்த பதிவு சில மாற்றங்கள் செய்து வெளியிட்டிருக்கிறேன். பல்வேறு வகைப் பதிவுகளில் இதுவும் ஒன்று.
      சிட்டுக் குருவி விமலன் எனக்கும் பிடித்தவர் நான் வலைசரத்தில் அவரது பதிவை அறிமுகப்படுத்தி இருந்தேன். நீ...........ண்ட கருத்துக்கு நன்றி, புஷ்பா மாமி விரைவில் வருவார்.

      நீக்கு
    2. உஷா!!!

      ***அதிகமாக பதிவுகளை தொடர்ந்து கொடுத்து கொண்டிருப்பதும் வருகையாளர்களை பொறுத்தும் ரேங்க் மாறுகிறதே தவிர அது படைப்பின் ஆக்கத்திற்காக அடையும் வெற்றி இல்லை.. என்று புரிந்ததும்... அந்த அடையாள பட்டியை நீக்கிவிட்டேன். ஓட்டு, ப்ளாக் ரேங்க் இதில் எனக்கு விருப்பமில்லை. கொடுத்து வாங்குவதுதான் ஓட்டு, ரேங்க் இதெல்லாம்...! என்னை பொறுத்தவரை எழுத்துக்கள் வாசிப்பவர்களை மனதில் சின்ன தாக்கத்தையாவது ஏற்படுத்தி சென்றால் போதும். அதுவே நம் எழுத்துக்கான வெற்றி!***

      மனதில் உள்ளதை எல்லாம் அள்ளிக் கொட்டிட்டீங்க!

      The problem is if you analyze too much about who votes, who responds for your posts ..whether you like it or not, you become a "political player" in blog world. Once you become such a player, you just become a VERY NORMAL PERSON! But a blogger generally thinks that he/she is a "creator" or "critic" with unique writing style or quality has and so on and so forth. Then such a "blogger" becoming a "normal person" is something he/she does not want to be such! :)

      நீக்கு
  14. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு...
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. பலருக்கும் பனன் தரும் பகிர்வு சகோ!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நன்றி! தலைவரே... தங்கள் வழிகாட்டுதல்படி என்தளத்தில் தமிழ்மணம் ஓட்டு பட்டையை இணைத்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    முரளி(அண்ணா)

    வலையுலக உறவுகள் அறியவேண்டி முக்கியம்மான பதிவு பதிவு அருமை வாழ்த்துக்கள்

    தொலைவில் இருந்து ஒரு குரல்.....கவிதை...பதிவு
    http://2008rupan.wordpress.com/

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. தெரியாத தகவல்கள். பகிர்விற்கு நன்றி! த.மா.12

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் அய்யா, தமிழ்மணத்தில் எனக்கு நீங்கள் இணைத்து கொடுத்தீர்கள். திரட்டி பற்றிய தகவல்கள் பலவ்ற்றை திண்டுக்கல் தனபாலன் அய்யா தெரிவித்தார்கள். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். பயனுள்ள தகவல்களைப் புதியவர்களுக்காக பகிர்ந்திருக்கும் தங்கள் நோக்கம் உயர்வானது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  20. நான் இதுவரைக்கும் ஓட்டே போட்டதில்லை.அதிகமா திண்டுக்கல் தனபாலன் தான் என் பதிவுகளை இணைத்து இருக்கிறார்.டிராப்டில் இருந்து அப்படியே ரீலீஸ் செய்வதால் இந்தப்பக்கம் வரமுடியமாட்டேங்குது.வேலைப்பணி அதிகம் கூட காரணம்..உங்க பதிவை படித்ததில் இருந்து இனி ஓட்டு போடனும்கிற எண்னம் வருது,,,நன்றி...

    பதிலளிநீக்கு
  21. அடடே அறியாத விசயமாயிருக்கே... இதுவரை என் பதிவுகள் வாசகர் பரிந்துரையில் வராததால் இதற்கான முயற்சி எடுக்கவில்லை... ஆனால் யார் மைனஸ் ஒட்டு போட்டார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது போல..

    பதிலளிநீக்கு
  22. எனக்கு முன்பு ஒருதடவை பிரச்சனை வந்தது.தமிழ்மணத்தில் http://www.manathiluruthivendumm.blogspot.com இப்படி இணைத்தால் நீங்கள் இன்னும் தமிழ்மணத்தில் சேரவில்லை என வருகிறது. என் மெயில் ஐடியை வைத்து சோதித்தால் உங்கள் தளம் ஏற்கனவே இணைத்திருக்கிறது என வருகிறது... சில நாட்கள் கழித்துதான் கண்டுபிடித்தேன். www -வை நீக்கிவிட்டு இணைக்கவேண்டும் என்று...

    தமிழ் 10 சுத்தவேஸ்ட் . ஓட்டு 5 விழுந்திருக்கிறது. ஆனால் பார்வையாளர்கள் இரண்டு என காண்பிக்கிறது. அதாவது ஓட்டுப் போட்டவர்கள் கூட என் தளத்தை பார்வையிடவில்லை என்றுதானே அர்த்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடுபொறிகளில் தமிழ் மணத்தில் இணைக்கப்பட்ட பதிவுகளே கிடைக்கின்றன, உதாரணத்திற்கு முரளிதரன் ( தமிழில்) என்று தேடினால் தமிழ் 10 லிருந்தே பதிவுகள் காட்சி அளிக்கும்.

      நீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895