பெட்டிக்கடை 4
ஊஞ்சல் புதிருக்கான விடை
கடந்த பெட்டிக் கடையில் ஊஞ்சல் ஆடுவது பற்றி ஒரு புதிரைக் குறிப்பிட்டிருந்தேன். (புதிரை படிக்க இங்கு கிளிக் செய்க )அதன் விடையை வவ்வால் சரியாக சொல்லி விட்டார். அதற்கான விளக்கங்களும் விரிவாக அவரே கருத்தில் சொல்லி விட்டதால் இப்போது அதை விளக்கப் போவதில்லை
விடை . தாத்தா பாட்டி, அம்மா அப்பா, குழந்தைகள் மூன்று பேருமே எடுத்துக் கொள்ளும் நேரம் ஒன்றே.
இது தனி ஊசல் பாடம்,சுவாரசியமாக சொல்லிக் கொடுப்பதற்காக நான் உருவாக்கிய புதிர். ஊசல்(ஊஞ்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) மெதுவாக ஆடினாலும் சரி வேகமாக ஆடினாலும் சரி அலைவுநேரம் மாறாது. ஊசலின் நீளம் மாறினால் மட்டுமே அலைவு நேரம் மாறும்.
இது பற்றி சுவாரசியமான விஷயம் உண்டு .
இந்த உண்மையை கண்டறிந்தவர் கலீலியோ. ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது தற்செயலாக சர்ச்சில் சங்கிலியில் கட்டி தொங்க விடப்பட்ட விளக்கு காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை கவனித்தார்.அதை உற்று நோக்கிய கலீலியோ, அது காற்றின் வேகத்திற்கேற்ப எப்படி ஆடினாலும் ஒரு அலைவுக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது. கூடுதல் ஆச்சர்யம் என்னவெனில் அப்போது கடிகாரம் கண்டுபிடிக்கப் படவில்லை. பின் எப்படி இந்த உண்மையைக் கண்டறிந்தார். விளக்கின் அலைவை தன் நாடித் துடிப்பின் மூலம் கணக்கிட்டார். இந்த உண்மை அறியப்பட்ட காலம் கி.பி. 1642.
இதனால் என்ன பயன் என்று கேட்கிறீர்களா? பெண்டுலம் கடிகாரம் கண்டு பிடிப்பதற்கு இதுதான் அடிப்படையாக அமைந்தது. தான் இறப்பதற்கு முன்னர் ஒரு கடிகாரம் தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தார் கலீலியோ . ஆனால் முடியவில்லை. இதை அடிப்படையாக வைத்து டச்சு நாட்டு அறிஞர் ஹைஜென்ஸ் என்ற விஞ்ஞானிதான் வெற்றிகரமாக முதல் கடிகாரத்தை உருவாக்கினார். தனி ஊசல் பாடம் நடத்தும்போது பெரும்பாலான ஆசிரியர்கள் இதெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே! அலைவு நேரம் கண்டுபிடிக்கும் சோதனை எதற்காகப் பயன்பட்டது என்று உங்கள் ஆசிரியர் உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா? அப்படி இருந்தால் அந்த ஆசிரியரின் பெயரை சொல்லுங்கள் பாராட்டு விழா நடத்தி விடலாம்.
இன்னும் விளக்கமாக எழுதினால் பயந்து ஓடி (ஒட்டி) விடுவார்கள் என்பதால் இதன் தொடர்ச்சியை தற்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்.
***************************************************************************************************
சச்சின் ஒய்வு :
ஒரு வழியாக சச்சின் தனது ஓய்வை அறிவித்து விட்டார். எவ்வளவுதான் புகழும் பணமும் சம்பாதித்தாலும், திறமை குறைந்து போனதை அறிந்த பின்னும் விலக மனமின்றி துரத்தும் வரை விடாப் பிடியாக இருப்பது இந்திய வீர்கள் மட்டுமே. சச்சின் ஒரு சகாப்தம் என்பதில் சந்தேகம் இல்லை. அதிக அளவில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காமல் இருந்ததே ஒரு சாதனைதான். என்ன? கொஞ்சம் முன்னரே ஒய்வு அறிவித்திருக்கலாம்!
ஓய்வை அறிவித்து விட்டதால் விமர்சித்தவர்கள் கூட கொஞ்ச நாளைக்கு அவருடைய தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள். ஓய்வுக்குப் பின் ஒரு எம்பியாக கிரிக்கெட் மட்டுமல்லாது மற்றவிளையாட்டுகளையும் வளர்ப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்றே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. செய்வாரா அல்லது எம்பி சலுகைகளை அனுபவித்துக் கொண்டு மௌனமாகவே இருந்து விட்டுப் போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
சச்சின் தொடர்பான பிற பதிவுகள்
சதத்தில் சதம்! சச்சினுக்கு ஒரு வாழ்த்துப்பா!சச்சினுக்கு ஒரு கடிதம்.
**********************************************************************************************
ஈஞ்சம்பாக்கம் சீரடி சாய்பாபா கோவில்
ஈஞ்சம்பாக்கம் சீரடி சாய்பாபா கோவில்
நீலாங்கரையை தாண்டி ஈன்ஜம்பாகாத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலுக்கு மாதம் ஒருமுறை போவது வழக்கம். கிழக்கு கடற்கரை சாலையில் பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டருக்கு அருகில் கடற்கரையை ஒட்டி அமைதியான சூழலில் கோவில் அமைந்திருக்கிறது. கொஞ்சம் பெரிய பரப்பளவில் அழகான மரங்களும் செடிகளும் நிறைந்த சோலைக்குள் கோவில் கட்டப் பட்டிருக்கிறது. மாலை 6 மணிக்கு சென்றால் வெளியில் பறந்து திரிந்து கூடு சேரும் கீச்சு கீச்சு என்று பறவைகளின் ஒலியும், வங்கக் கடலின் அலை ஓசையும் நமது செவிகளுக்குள் நுழைந்து ஒரு ஆனந்தத்தை தரும். வட மாநில மக்கள் பலரை இங்கு காண முடிகிறது. விடுமுறை நாட்களில் சில திரை உலக பிரபலங்களும் இங்கு வருவதுண்டு. கோயிலை ஒருமுறை சுற்றி காலாற நடந்து வந்தால் மனம் லேசாகத்தான் ஆகிறது.
வெளியே வந்தால் கோயிலை ஒட்டி சிறிது நடந்தால் கடற்கரை. சிது நேரம் செலவழித்து வங்கக் கடலின் அழகை ரசித்து திரும்பலாம்.
பக்கத்து காம்பவுண்ட் ராதிகாவின் ராடன் ஹவுஸ்
********************************************************************************************
ரூபனின் கவிதைப் போட்டி
தீபாவளியை ஒட்டி பதிவர் ரூபன் ஒரு கவிதைப் போட்டியை அறிவித்திருந்தார்.
போட்டிக்கான தலைப்பு
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டிக்கு கவிதைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 31.10.2013 என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு
இந்த இணைப்பிற்கு சென்று பார்க்கவும். எத்தனை கவிதைகள் இதுவரை வந்திருக்கிறது என்று தெரியவில்லை.கவிஞர்களே உங்கள் படைப்புகளை விரைந்து அனுப்புங்கள்.
திடங்கொண்டு போராடு சீனுவைத் தொடர்ந்து தன் சொந்தப் பணத்தை செலவு செய்து ஏராளமான பரிசுகளை அறிவித்து கவிதைப் போட்டியினை நடத்தும் தம்பி ரூபனுக்கு, கவிஞர்களே உங்கள் அழகான படைப்புகளை அனுப்பி ஆதரவு வழங்குங்கள்.
ரூபன்!,இது வரை எத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
ரூபன்!,இது வரை எத்தனை பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
********************************************************************************************
ஒரு பஞ்ச் கவிதை
தற்கொலைக்கு முயற்சிக்காதே!
ஏற்கனவே நீ
இறந்திருக்கலாம்!
*****************************************************************************************
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
முந்தைய பெட்டிகடை பதிவுகள்
பெட்டிக்கடை - 1-திருக்குறளில் இலக்கணப் பிழையா?
பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும்
சச்சின் ஒய்வு கண்டிப்பாக ஒய்வாக இருக்காது, மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்...
பதிலளிநீக்குரூபனின் கவிதைப் போட்டி பற்றிய அறிவிப்பை உங்களின் தளத்திலும் அறிவித்தமைக்கு நன்றிகள் பல... நாட்கள் நெருங்க நெருங்க நிறைய பதிவுகள் வந்து கொண்டிருக்கிறது...
பஞ்ச் கவிதை பஞ்ச்...! நீங்களும் போட்டியில் கலந்து கொள்ளவும்...
நன்றி
நீக்குபோட்டியில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
தொகுப்பாய் எழுதிய எல்லாம் அருமை...
பதிலளிநீக்குபஞ்ச் கவிதை சூப்பர்.
சச்சின் கண்டிப்பாக விளையாட்டுக்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்.,..
அப்படி நந்தால் நல்லது
நீக்குசுவையான செய்திகள் அடங்கிய பதிவு...
பதிலளிநீக்குகவிதைப் போட்டி தேன்சுவை...
நன்றி மகேந்திரன்
நீக்குsuvai thanthathu...
பதிலளிநீக்குthakavalkal...
நன்றி சீனு
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி (அண்ணா)
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்பதுதான் வழக்கம்.....அண்ணா
சச்சினின் ஓய்வு பல இரசிகர்களுக்கு வலியாகத்தான் இருக்கும்
நான் நாடாத்தும் கவிதைப் போட்டியை நினைவு படுத்தி பதிவாக பதிவு செய்தமைக்கு மிக நன்றியண்ணா... கலந்து கொண்டவர் விபரங்களை நான் மின்னஞ்ல் மூலம் அனுப்பி வைக்கிறேன்.. கட்டாயம்.....இந்த கவிதைப்போட்டிக்கு பல இணையத்தள பதிவர்கள் மிக ஆதரவு தந்துள்ளார்கள் அவர்களில் ஒருவர் நீங்களும் என்பதில் பெருமைப்படுகிறேன்.......
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குசுவாரஸ்யமான அருமையான பகிர்வு
பதிலளிநீக்குரூபனின் கவிதைப் போட்டி குறித்த அறிவிப்பை
தங்கள் தளத்தில் வெளியிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி
நீக்குசச்சினின் ஓய்வு எதிர்பார்க்கப் பட்டிருந்தாலும்கூட, ஓய்வு பெறப் போகிறார் என்று தெரிந்ததும் எல்லோருக்கும் கொஞ்சம் வருத்தமும் ஏக்கமும் வரும்.
பதிலளிநீக்குமைலாப்பூர் பாபா கோவில் சென்றிருக்கிறேன். இங்கு சென்றதில்லை. ஒருமுறை பார்த்து வரவேண்டும்.
ரூபனின் கவிதைப் போட்டி பற்றி DD தளத்திலும் முன்பேயும், இப்போதும் படித்தேன். கலந்து கொள்வோருக்கும், ரூபனுக்கும் எங்கள் வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம்
நீக்குகலீலியோ செய்திகள் இதுவரை அறியாதவை.
பதிலளிநீக்குபஞ்ச் கவிதை அருமை ஐயா. நன்றி
நன்றி ஜெயகுமார்
நீக்குபஞ்ச் கவிதை நல்லாயிருக்கு.
பதிலளிநீக்குநன்றி உஷா
நீக்குgood post.
பதிலளிநீக்குVetha.Elangathilakam.
நன்றி மேடம்
நீக்குபஞ்ச் கவிதை சூப்பர்ங்க.
பதிலளிநீக்குநன்றி ஜோசப்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குமுரளி(அண்ணா)
முக்கிய அறிவித்தல்......,
கவிதைப்போட்டிக்கான காலத்தை 31.10.2013 என்று பதிவில் மாற்றம் செய்யுங்கள்
தங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி..அண்ணா
பல இணையத்தள உறவுகள் கேட்டதற்கு இனங்க கவிதைப் போட்டிக்கான காலம் 20.10.2013 என்று முன்பு இருந்தது அதில் சிறிது மாற்றம் செய்து 31.10.2013 என்று காலம் நீடிக்கப்படுகிறது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பஞ்ச் கவிதைன்னா முகத்தில் ஒரு குத்து விட்டு சொல்லனுமோ :)
பதிலளிநீக்குகுத்தா இருந்தாலும் எங்களுக்கு குடித்து பழக்கமில்லை. வாங்கித்தான் பழக்கம் ஹிஹிஹ்
நீக்குஇன்னும் சிலதுகளை சேர்க்கலாமோ என தோன்றுகிறது .... சட்டென்று முடிந்தமாதிரி உணர்வு .. இது எனக்கு மட்டும்தானா ?
பதிலளிநீக்குஐந்து என்று எண்ணிக்கை வைத்திருக்கிறேன். நிறைய சேர்த்தால் ரொம்ப நீளமாக ஆகிவிடக் கூடும் என்று நினைத்தேன்.
நீக்குஉங்கள் பெட்டிக்கடையில் இருப்பதெல்லாம்
பதிலளிநீக்குநல்ல சரக்காகத் தான் இருக்கிறது மூங்கில் காற்று.
நன்றி அருணா
நீக்குஅனைத்துமே அசத்தல்!..
பதிலளிநீக்குஉங்கள் பஞ்ச் டயலாக்கா...:) அதுவும் நன்றாகத்தான் இருக்கின்றது சகோ!
வாழ்த்துக்கள்!
நன்றி இளமதி
நீக்குபெட்டிக்கடையில் இன்று சரக்குக்கள் கொஞ்சம் கம்மியாக இருக்கிறதே! கவிதைப்போட்டி பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅப்படியா! அடுத்த முறை கூட கொஞ்சம் சேத்துடலாம் . ஆலோசனகிக்கு நன்றி
நீக்குஓய்வுக்குப் பின் ஒரு எம்பியாக கிரிக்கெட் மட்டுமல்லாது மற்றவிளையாட்டுகளையும் வளர்ப்பதற்கு ஏதேனும் முயற்சி செய்ய வேண்டும் என்றே என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு. \\இவரு இதுவரைக்கும் சமூக சேவை என்ன பண்ணினாருன்னு பாருங்க, இதுக்கு மேலேயும் அவரு அப்படியேதான் இருப்பாரு...........பணம்.......பணம்.........பணம்...........
பதிலளிநீக்கு