என்னை கவனிப்பவர்கள்

புதன், 2 அக்டோபர், 2013

தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்!

இங்கிலாந்தில் லங்காஷயரில் தொழிலாளர்களை சந்திக்கும் மகாத்மா
இன்று காந்தி ஜெயந்தி. தெரிந்த செய்திகளும் தெரியாத தகவல்களுமாய் இன்றைய தினம் இணையம் மகாத்மாவை கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும் நேர்மையாக நடப்பவரை "இவர் பெரிய காந்தி" என்று கிண்டல் செய்யும்  நிலை இன்னும் மாறவில்லை. காந்தியைப் பற்றி குழந்தைகளுக்கு சரியாக கற்பிக்கப் படுவதிலை. ஏனென்றால் அவரைப் பற்றிய சரியான புரிதல் நமக்கே இல்லை. உலகமே போற்றும் காந்தியை கிண்டலடிப்பதும் இழிவாகப் பேசுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதுதான் அறிவுஜீவித் தனம் என்று நினைக்கும் கூட்டமும் உண்டு.
காந்தி  எப்படிப்பட்ட  தலைவர் என்பதை அறிந்து கொள்ள உதவும்   ஒரு வரலாற்று சம்பவத்தை பகிர்ந்து  கொள்ள விரும்புகிறேன்.

நமது நாட்டில் விளையும் பருத்தியை நம்மிடம் இருந்து கொள்முதல் செய்து தங்கள் நாட்டுக்கு கொண்டு போய் நெசவு செய்து அந்த ஜவுளிகளை நம்மிடையே விற்பனை செய்து வந்தனர் ஆங்கிலேயர்கள். அதாவது நமது மூலப்பொருளைக் கொண்டு தங்கள் நாட்டுத் தொழிலை வளர்த்து அந்தத் தொழிலுக்கான சந்தையாக நமது நாட்டையே பயன்படுத்தி தங்களது வியாபாரத்தை பெருக்கிக் கொண்டனர்.
    இதைக் கண்டித்த காந்திஜி அந்நியத் துணி புறக்கணிப்பு இயக்கத்தை தீவிரமாக நடத்தினார்  அவரது அறைகூவலின்படி காங்கிரஸ் தலைவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து ஆங்கிலேயர்களின் வியாபாரப் பொருட்களை குறிப்பாக ஜவுளிப் பொருட்களை புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுக் கூட்டங்களில் விளக்கினார்கள். கூட்டம் நடைபெறும்போது காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாகப் போய் பொது மக்களிடம் உள்ள வெளி நாட்டுத் துணிகளை வாங்கி வருவார்கள்.அனைத்து துணிகளும் பொதுக் கூட்ட மேடைக்கு முன்பாகக் கொட்டப்பட்டு தீவைத்துக் கொளுத்தப்படும். இது அனைவரும் அறிந்ததே! படித்திருப்போம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.சொல்லக் கேட்டிருப்போம். ஏதோ ஒப்புக்காக நடந்தது அல்ல இந்தப் போராட்டம்
மிகத் தீவிரமாக அந்நியத் துணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.
     ஒவ்வோர் ஊரிலும் தொண்டர்கள் வீடுவீடாக சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதனால் பொதுமக்களில் பலர் அந்நியத் துணிகளை வாங்குவதில்லை என முடிவெடுத்தனர். இது முதல் கட்டம். அடுத்த படியாக துணிக் கடைகளுக்குச் சென்று அந்நியத் துணிகளை விற்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்தனர். இதற்கும் பலன் கிடைத்தது.
  மூன்றாவது கட்டம் சத்தியாக்ராகத்தின் உச்சகட்டம் அந்நியத் துணிகளை விற்பனை செய்யும் கடைகளின் முன் தொண்டர்கள் திரண்டு நிற்பார்கள். அங்கே ஜவுளி எடுக்க வரும் வாடிக்கையாளர்களிடம் கை கூப்ப்பியவாறு பிரச்சாரம் செய்வார்கள். இவர்களது வேண்டுகோளுக்கு  அவர்கள் செவி சாய்க்காவிட்டால் அவர்களது காலில் விழுந்து கெஞ்சுவார்கள். அதையும் மீறி உள்ளே செல்ல முற்பட்டால் கடையின் படிகளில் வரிசையா படுத்து விடுவார்கள். அவர்களைத் தாண்டி அல்லது மிதித்துத்தான் கடைக்குள் நுழைய முடியும் மங்கல நிகச்சிகளுக்காக ஜவுளி எடுக்க வருபவர்கள் இப்படி அபசகுனமா இருக்கிறதே என்று வீடு திரும்பிவிடுவார்கள்.
தொடர்ந்து நடந்த இந்த போராட்டத்தின் விளைவாக  இந்தியாவில் ஆங்கிலேயத் துணி மோகம் குறைய ஆரம்பித்து விட்டது மட்டுமல்ல ஆங்கிலேய ஜவுளி வியாபாரம் படுத்து விட்டது.
  அதனால் இந்தப் போராட்டத்தின் தாக்கம் இங்கிலாந்தில் பூதாகாரமாக இருந்தது. அங்கு உற்பத்தியான துணிகள் வியாபாரம் ஆகாமல் தேங்கிப் போக ஆரம்பித்தன. இதனால் இங்கிலாந்து முழுவதும் குறிப்பாக லங்காஷயரில் ஏராளமான ஜவுளி மில்கள் மூடப்பட்டன. இதன் விலையாக சுமார் பல்லாயிரம் பேருக்கு வேலை போனது
மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சாமானிய இந்தியன் கொடுத்த அடி இது.. ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்கள் சொல்லிக் கொடுத்த பாடம் இது.
ஆனால்  காந்திஜியின் அடுத்த கட்ட நடவடிக்கையோ உலகம்முழுவதும் அரசியல் பாடமும் பொருளாதாரமும் போதிப்பதாய்  அமைந்தது.

   வட்ட மேசை மாநாட்டுக்காக இங்கிலாந்து சென்ற காந்தி, லங்காஷயருக்கு சென்று வேலை இழந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்தார். அப்போது பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்
"உங்களில் சில லட்சம் பேருக்குத்தான் வேலை போனது. ஆனால் உங்கள் வியாபரத்தினால் எங்கள் நாட்டில் பலகோடி பேருக்கு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. உங்கள் தரப்பு நியாயம் பெரிதா எங்கள் தரப்பு நியாயம் பெரிதா என்று யோசித்துப் பாருங்கள் .நான் உங்களுக்கு எதிராகப்போராடவில்லை. என் நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராடுகிறேன்......" 
இந்த மனிதரின் தலைமையில்தான் ,போராட்டத்தின் விளைவாகத்தான் அங்கு அத்தனை பேருக்கு வேலை பறிபோனது. அவர்களை நேரில்சந்தித்து "ஐயா! எங்களை அநியாமாக சுரண்டித்தான் இத்தனை நாட்களாக நீங்கள் பிழைப்பு நடத்தி வந்தீர்கள்" என்று சொல்ல எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும்?
இங்கிலாந்து பத்தரிக்கைகள் காந்திஜியின் லங்காகஷயர் விஜயம் பற்றி உயர்வாக எழுதின. (எதிர்மறைக் கருத்துக்களும் வெளியிடப்பட்டன) 
இப்படியும் ஒரு தலைவன் இருப்பானா? இந்த ஆள் மனிதன்தானா என்றெல்லாம் பலரும் போற்றியதாக லண்டன டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளதாம்.
ஒரு போராட்டத்தை வழி நடத்தும் தலைவன் எப்படி நடந்து  கொள்ளவேண்டும்? . அவனது பொருளாதாரக் கண்ணோட்டம் சமுதாயக் கண்ணோட்டம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம் அன்றோ?
இன்றும்  இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க காந்தியின் வழியே சிறந்த வழிகளில் ஒன்றாகக் கொள்ளலாம் அல்லவா?


********************************************************************************************************
தொடபுடைய  பதிவு .
காந்தி தேசத் தந்தை இல்லையா?

27 கருத்துகள்:

  1. பதிவின் தலைப்பும் சொல்லிச் சென்ற விஷயமும்
    மிக மிக அருமை.அறியாதன அறிந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான நாளில் ஒரு அருமையான உதாரண சம்பவம்... பாராட்டுக்கள்...

    பதிலளிநீக்கு
  3. பறக்க வாருங்கள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    பதிலளிநீக்கு
  4. காந்தியின் வழியை பின்பற்றி ரூபாயின் மதிப்பை உயர்த்தலாம் ..நல்ல ஆலோசனைதான் !ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் தங்களின் சொத்தின் மதிப்பைக் கூட்டிக் கொள்வதில் அல்லவா குறியாய் இருக்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  5. காந்தியை பற்றிய தகவல்கள் சிறப்பு!

    பதிலளிநீக்கு
  6. மிகச்சிறப்பான பதிவு! காந்தியை பற்றி இன்னும் முழுமையாக அறியாமல்தான் இருக்கிறோம்! இந்த நன்னாளில் அவரை பற்றி சிறிது உங்கள் மூலமாக அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. காந்தியை நினைக்கும் நாளில் ஒரு அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  8. காந்தி ஜெயந்தி நாளில் அருமையான பகிர்வு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான பதிவு. இன்றும் காந்தியை இழிவாக சித்தரித்து பலரும் பலவாறாக எழுதிவரும்போது சரியான சமயத்தில் சரியான பதிவு. அவர் படித்த படிப்புக்கும் இருந்த இடத்திற்கும் வேறொரு இந்தியராக இருந்தால் தன் வரையில் நன்றாக சொத்து சேர்த்து சுகமாக இருந்திருப்பார்கள். யாராக இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். அப்படி செய்யாமல் இருந்ததினால்தான் காந்தி என்றும் போற்றப்படுபவராக இருக்கிறார்!

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    முரளி(அண்ணா)

    காந்தியின் பிறந்த நாளில் அவரைப்பற்றிய பதிவு மிக அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. மகாத்மா காந்தியின் பெருமையினை பறைசாற்றும் அற்புதமான பதிவு ஐயா. ஆனால் காந்தி போல் இன்று யாரேயேனும் இருக்கிறார்களா என நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. காந்தியின் நினைவினைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  12. நல்லதொரு பதிவு.. பகவான்ஜி யின் கமெண்ட் 'உண்மை உண்மை' என்று தலையாட்ட வைத்தது.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பகிர்வு.....

    எத்தனையோ விஷயங்கள் செய்யலாம் - அவர் பெயரைச் சொல்லி அவர் படம் அச்சிடப் பட்டிருக்கும் தாள்களைத் தானே நாடுகிறது பலரின் மனம்.....

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் சொல்லியிருப்பது ரொம்பவும் உண்மை. இளைய தலைமுறைக்கு காந்தியடிகளின் வேதனை, வலி புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  15. http://tnmurali.blogspot.com/2011/10/blog-post_30.html
    சகோதரர் T N முரளிதரன் அவர்களுக்கு, ஒரு மன அமைதிக்காக நீங்கள் எழுதிய உங்கள் ஜூனோ! என்ற செல்ல நாயினைப் பற்றிய கட்டுரைகளை படித்தேன். உங்கள் வலைப் பதிவில் ARCHIVE இல்லாததால் இந்த கட்டுரைகளை கண்டுபிடிக்க சற்று சிரமப் பட்டேன். நேரம் இருக்கும் போது ” ஜென்மம் நிறைந்தது - சென்றது “ஜாக்கி” என்ற எனது கட்டுரைக்கு கருத்துரை தரவும்.
    http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  16. மிக நல்ல பதிவு.
    நன்றி மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  17. அருமை அய்யா. அறியாத விசயங்கள் அறிந்து கொண்டோம். சிறப்பான நாளில் மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பதிவுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  18. மிக அருமையான பதிவு. காந்தியைப் பற்றி நம்மில் பல பேர் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதே உண்மை.

    காந்தியை ஓர் கூட்டம் கடுமையாக விமர்சித்துக்கொண்டு தங்கள் அறிவுஜீவித்தனத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  19. காந்தி பற்றிய சமாச்வாரம் மிக நன்று.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  20. காந்தி உண்மையிலேயே ஆச்சரியமான மனிதர் தான்!!, பிடிவாதக்காரர் :)

    பதிலளிநீக்கு
  21. இப்படி ஒவ்வொரு தேசத்தலைவர்கள் பிறந்த நாள் வரும்போதெல்லாம் பாட புத்தகங்களில் அல்லாத முக்கியமான நிகழ்வுகளை , தியாகங்களை பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொன்னால் பலர் விடுமுறை தினமாக மட்டும் கருதப்படும் நாட்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர்களுக்கு புரியும். நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895