என்னை கவனிப்பவர்கள்

சனி, 28 செப்டம்பர், 2013

இதுவல்லவா வெற்றி!

   
 எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள்
இதோ இன்னும் சில  நிமிடங்களில் அந்த   ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோ ஒன்பது பேர் போட்டியில் கலந்து கொள்ள  தொடக்கக் கோட்டுக்கருகே  தயாராக இருக்கின்றனர். கலந்து கொள்பவர்களின் முகத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி தெரிகிறது. போட்டி தொடங்குவதற்கான விசில் ஒலிக்கப்பட உடனே ஓட ஆரம்பிக்கின்றனர். பார்ப்போர் கை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். உற்சாக வார்த்தைகளை உரக்கக் கூவுகின்றனர். ஒருவரை ஒருவர் முந்த முயல்கின்றனர். அடடா! என்ன இது? ஓடிக்கொண்டிருந்த ஒருவன் கீழே விழுந்து விட்டானே! ஐயோ! அவனால் எழுந்திருக்க முடியவில்லையே! ரத்தம் வேறு வருவது போல் தெரிகிறதே! அவன் அழ ஆரம்பித்து விட்டானே! அவனது அழுகுரல் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனரே! முன்னால் ஓடிக்கொண்டிருந்த மற்ற எட்டுபேரும்   அந்த அழுகுரல் கேட்டு நின்று திரும்பிப் பார்க்கிறார்கள். தங்களில் ஒருவன் கீழே விழுந்து அழுதுகொண்டிருப்பதைப் கண்டு   அவர்கள் முகத்தில் அதிர்ச்சி தொற்றிக் கொள்ள அவனை நோக்கி ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பிக்கின்றனர். விழுந்த சிறுவன் எழுந்திருக்க முயறசி செய்கிறான். பாவம்! முடியவில்லையே!  அவனருகில் வந்து விட்டாள் போட்டியில் கலந்து கொண்ட அந்தப் பெண்.

என்ன நடக்கப் போகிறது அங்கே! பார்வையாளர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த சிறுவனின் கண்களில் கண்ணீர்  பெருகிக் கொண்டிருக்க அவனை தோளின் மீது கையைப் போட்டு  லேசாக அணைத்து தூக்கி நிறுத்துகிறார். ஆஹா! அவனது நெற்றியில் முத்தமிட்டு ஆறுதல்  கூறுகிறாரே. என்ன ஆச்சர்யம் மற்றவர்களும் அவனருகே வந்து அன்புடன் விசாரிக்கின்றனரே! ஒன்றும் புரியாமல் பார்வையாளர்கள் அந்த அற்புதக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    என்ன இது கண்முன்னே ஒரு  அதிசயம் நடந்து கொண்டிருக்கிறதே! அந்த எட்டு பேரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்தப் பையனையும் சேர்த்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பிக்கின்றனர். இதோ ஓன்பது பேரும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டை தொடுகின்றன்றார்களே! அவர்களை விட்டுவிட்டு பார்வையாளர்களைப் பார்க்கிறேன்.  யாருக்கு பரிசு கிடைக்கப் போகிறது? ஆவலுடன் எட்டிப் பார்க்கின்றனர் அவர்கள்.  ஒன்பது பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் படுகிறார்கள் . தங்க மெடல்கள் வழங்குகிறார்கள்.. அத்தனை பேர் விழிகளிலும் கண்ணீர். எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர். அத்தனை பேரின் கண்ணீர்த்துளிகளிலும் அந்தக் காட்சி எதிரொளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

 இதில் பரவசப்படவோ  கண்ணீர் விடவோ என்ன இருக்கிறது என்கிறீர்களா? அவசர்ப்பாடாதீர்கள்.கொஞ்சம் இருங்கள் 
   நீங்கள் கேட்டுக் கொண்டிருந்த வர்ணனை  சியோட்டில் நடந்த ஊனமுற்றோர்களுக்கான  ஓட்டப் பந்தயம் பற்றியது.
  இப்போது சொல்லுங்கள் என்கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்ணீர் உங்கள் கண்களிலும் வழிந்து கொண்டிருக்கிறதா? மனிதம் போற்றுபவர் அல்லவா நீங்கள்? கட்டாயம் கண்ணீர் வரத்தான் செய்யும்.

************************

குறிப்பு: எப்போதோ படித்த செய்தியை வைத்து இந்த பதிவை புனைந்திருக்கிறேன்.முந்தைய  அறிவியல் பதிவுகளை படித்து அதிர்ச்சி அடைந்தவர்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.



*********************************************************************************

இதைப் படிச்சிட்டீங்களா?

எ.பா.ப.கு. க.  விவேகானந்தரின் கண் திறந்த தேவ தாசி-

எட்டிப் பார்த்து படித்த குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-2 கூகுள்ல தேடிப் பாத்து சொல்றேன்!

எட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதை-3 காபி மாதிரிதான் வாழ்க்கை

எட்டிப்பார்த்து படித்த குட்டிக் கதை-4யாரோ உங்களை பாக்கறாங்க!

32 கருத்துகள்:

  1. ஊனம் உள்ளத்தில் இல்லையென நிரூபித்து விட்டார்கள் !
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. அன்பால் இணைந்து ஓடி எல்லோரும் வெற்றி பெற்றவுடன் கண்ணீர்வந்து விட்டது.
    அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    முரளி(அண்ணா)

    கதை மிக அருமை ஒரு கனம் மனதை கலங்கவைத்து விட்டது அண்ணா பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்படன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. கண்கலங்க வைக்கும் பதிவுதான். சம்பவம் நிஜமாக நடந்த சம்பவமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம்தான் என்று கூறுகிறார்கள். சற்று மிகைப் படுத்தப் பட்டிருக்கலாம்.

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான கருத்துடன் கூடிய பகிர்வு
    ஆம் அவர்கள் அனைவரும்
    மனிதாபிமானப் போட்டியில் முதல் பரிசு பெறத்
    தகுதி உடையவர்கள்தான்
    மனம் கவர்ந்த பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. உண்மையில் இதுதான் வெற்றி.... எப்போதோ படித்தனாலும் இப்போதும் இனிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் சொன்ன கதையை முன்பு காணொளியாக யுடியுப்பில் பார்த்திருக்கிறேன் நண்பரே. அந்தக் காட்சியைப் பார்த்த ஒவ்வொருவரும் கண்கலங்கிவிடுவர்.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான் அவர்கள் ஊனத்தை வென்றவர்கள்தான்..

    பதிலளிநீக்கு
  10. முன்பே படித்த கதையென்றாலும் நீங்கள் சொன்னவிதம் நன்றாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  11. அன்புச் சகோ முரளி... சொல்ல வார்த்தைகளற்று தொண்டைக்குள் விக்கிக் கொண்டது...
    ரைப் பண்ண முடியாது கண்கள் கரைந்து மறைக்கிறது...
    ஊனம் அவர்கள் உடலில்தான்...

    ஆனால் நாமெல்லாம் உருபடியான மனிதர்கள் எங்கிறோமே
    ஊனம் எங்களிடமும் நிறைய உண்டு. மனத்தில்!!!

    இவர்களைப் பார்த்தேனும் எம் மன ஊனங்களை மாற்றுவோமா?..

    அருமையான கதைப் பகிர்வு. உங்களுக்கேயான எழுத்தாற்றலுடன்..
    மிக்க நன்றி சகோ!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  12. உண்மையிலேயே கலங்க வைத்துவிட்டது ஐயா.
    உடலில் ஊனமிருக்கலாம்
    உள்ளத்தில் ஊனமில்லை
    என்று நிரூபித்தவர்களல்லவா இவர்கள்.
    மனிதம் நிரம்பி வழிகிறதே இவர்களிடம்
    இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்
    போற்றப்படவேண்டியவர்கள்
    நாமெல்லாம் பின்பற்றத் தக்கவர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  13. அருமையான பகிர்வு. இக்கதையை மாணவர்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வது உண்டு அப்பொது கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்கவே செய்யும்.. ஆண்டவன் நம்மை முழுமையாகப் படைத்திருக்கும் போதே அடுத்தவர்களுக்கு உதவ தயங்குகிறோம். ஆனால் இவர்களின் செயல் நமக்கு பாடமல்லவா! தகவலுக்காக: இக்கதை தற்போதுள்ள சமச்சீர் கல்வி பாடத்திட்டதில் 8 வகுப்பு ஆங்கிலப் பாடமாக மூன்றாவது பருவத்தில் இடம் பெற்றுள்ளது. மனிதத்தைப் புரிய வைத்த பதிவுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  14. உருக்கமான பதிவு முரளி. தொடருங்கள்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. விளையாட்டை விளையாட்டாக மட்டுமே பார்க்கும் மனப்பான்மை,போட்டியாக சக விளையாட்டார் வந்து விடுவாரோ என்பதை விடுத்து அவரும் நம்மைப்போல்தானே என எண்ன வைக்கிற மனம் அவர்களில் இருந்ததை ச்சொல்லிச்செல்கிறது.கல்லுக்குள் அல்ல.ஈரத்திற்குள் ஈரம்/

    பதிலளிநீக்கு
  16. நாம் நமது என்று மட்டும் யோசிப்பவர்கள்தான் மனதில் ஊனப்பட்டு விடுகிறார்கள்.மனிதம் உள்ள அனைவருமே முழுமையான மனிதர்கள்தாம்! அன்பின் ஈரத்தை சொல்லிய கதை கண்களையும் நனைத்துதான் செல்கிறது.

    பயனுள்ள பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. இத நானும் கேள்வி பட்டுருக்கேன், ஆனாலும் இப்போ படிச்சாலும் நெகிழ்ச்சியா இருந்துச்சு. தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895