250 வது பதிவு
இதன் முதல் பகுதியை படிக்க
காபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது?
முந்தைய பதிவில் நாம் நீண்ட நேரம் உழைத்து எழுதிய பதிவுகள் சில வினாடிகளில் காப்பி பேஸ்ட் செய்பவர்களைப் பற்றி கூறி இருந்தேன்.அதற்கு நல்ல வரவேற்பு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நமது பதிவு காபி அடிக்கப் பட்டிருக்கிறதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பதை எனது சிற்றறிவிற்கு எட்டிய வரை-நான் அறிந்து கொண்டதை தெரிவிக்கிறேன்.
நண்பர் ஒருவர் கருத்தில் கூறியது போல பதிவின் ஒரு பகுதியை கூகிள்தேடும் பெட்டியில் இட்டு தேடினால் கிடைத்து விடும் என்று சொன்னார்.
ஆனால் கூகிள் தேடுதல் ஒரு குறிப்பிட்ட அளவு வார்த்தைகளையே ஏற்றுக் கொள்ளும். மேலும் அவ்வாறு தேடும்போது நாம் பதிவை இணைத்த திரட்டிகள்,முகநூல், பக்கங்களை காப்பி என்று காட்டும். உண்மையில் அவை நாம் பகிர்ந்தவையாக இருக்கும். அப்படியானால் என்ன செய்வது?
இதற்கென்று சில மென்பொருட்கள் உள்ளன. சில இலவசமாகவும் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் பல, பதிவை முழுவதும் காபி செய்து தேடும் வகையில் உள்ளன சில. நம் பதிவின் url ஐ கொடுத்தால் நமது பதிவு எங்கெங்கு எத்தனை சதவீதம் காப்பி அடிக்கிறது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும். அத்தகைய மென்பொருள்களில் நிறையப் பேர் அறிந்தது copyscape எனப்படும் மென் பொருளாகும் கீழுள்ள இணைப்பை கிளிக் செய்தால் அதன் கீழுள்ளவாறு காட்டி அளிக்கும் அதன் தளத்திற்கு செல்லும்
http://www.copyscape.com/
இங்கு உங்கள் பதிவின் url (உதாரணம்: http://www.tnmurali.blogspot.com/2013/05/modelvillege-hiwarebazar.html) முகவரியை தேடு பெட்டியில் இடவும் உங்கள்பதிவு எங்கெங்கு கோப்பி செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஒன்றின் கீழ் ஒன்றாக காட்டும். இவற்றில் நாம் பகிர்ந்தவை தவிர இதர தமிழ் இணையதள முகவரிகள் தெரிந்தால் அதை கிளிக் செய்து பார்த்து காப்பி செய்திருந்தால் அதை உறுதி செய்துகொள்ளல்லாம் கட்டணம் செலுத்தினால் பல வசதிகளை அளிக்கிறது copyscape. அதன் பேனரை இணைத்துக் கொண்டால் நமது பதிவுகளை கண்காணித்து காப்பி செய்யப்பட விவரத்தை நமக்கு தெரிவிக்கும்.
ஆனால் நான் பயன்படுத்தியது பிளாக்ஸ்பாட்டர் PLAGSPOTER என்ற மென் பொருள் .
கீழுள்ள முகவரியில் நுழைந்து அங்கு பதிவின் முகவரியை இட்டால் காப்பி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளமுடியும். சதவீத அளவு அதிகமாக இருந்தால் அவற்றை மட்டும் பார்த்தால் போதுமானது.
http://www.plagspotter.com
இவை தவிர DUPLICHEKER, PLAGIARISMA,PLAGIUM போன்ற மென்பொருட்களும் உள்ளன. எல்லா மென்பொருள்களுமே இலவச வசதிகளை வரையறைகளுக்குள்ளும் பல கட்டுப்பாடுகளுடன்தான் வழங்குகின்றன. காசு செலவழித்து பல வசதிகளை பெறுவது வீண் வேலை என்றுதான் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. நம் கண்ணில் பட்டால் கண்டிப்போம் இல்லையென்றால் கண்டுகொள்ளாமல் விடுவதே நல்லது.
இது தவிர நமது பதிவு காபி செய்யப்படுவதை தடுக்க பதிவடக்கத் தேர்வை DISABLE செய்வது இன்னொரு வழி. இம்முறையில் நமது பதிவுகளை மௌசின் மூலம் செலக்ட் செய்ய. முடியாது. ரைட் கிளிக் மூலமும் காப்பி செய்ய முடியாது.
நமது பதிவை செலக்ட் செய்து காப்பி செய்வதை தடுக்க
கீழ்க்கண்ட நிரலை காப்பி செய்து ஒரு கேட்ஜெட் இணைத்து விட்டால் SELECT AND COPY செய்வதை தடுக்கலாம், இதை செய்ய உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து Layout பகுதிக்கு சென்று அங்கு Add a Gadget கிளிக் செய்து HTML/JAVASCRIPT GADJET ஐ தேர்ந்தெடுத்து திறந்து கீழ்க்கண்ட நிரலை காபி செய்து பேஸ்ட் செய்து விடவும்.
<script type="text/javascript"> var omitformtags=["input", "textarea", "select"] omitformtags=omitformtags.join("|") function disableselect(e){ if (omitformtags.indexOf(e.target.tagName.toLowerCase())==-1) return false } function reEnable(){ return true } if (typeof document.onselectstart!="undefined") document.onselectstart=new Function ("return false") else{ document.onmousedown=disableselect document.onmouseup=reEnable } </script>
நிரல் உதவி: http://www.infozguide.com
பின்னர் சேமித்து வெளியேறவும் SAVE ARRANGEMENT ம் செய்யவும்.இப்போது உங்கள் பதிவை எளிதில் காப்பி செய்ய முடியாது .இதை நகலெடுப்பதற்கு வேறு வழிமுறைகள் உண்டென்றாலும் காப்பி பேஸ்ட் செய்பவர்கள் அவ்வளவு மெனக்கெடமாட்டார்கள் என்று நம்பலாம். இதற்கான நேரத்தில் வேறு ஒரு பதிவை காபி செய்துவிடலாம் என்று தாவி விடுவார்கள். ஆனால் இதில் உள்ள குறைபாடு என்னவெனில் நமக்கு கருத்திடுபவர்கள் நம் பதிவின் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பகுதியை காப்பி செய்து சுட்டிக்காட்டி பாராட்டவோ. விமர்சிக்கவோ, கருத்து சொல்லவோ தேர்ந்தெடுக்க முயற்சிசெய்யும்போது முடியாத நிலையில் எரிச்சலடையக் கூடும். வரலாற்று சுவடுகள், அட்ராசக்கை போன்றவர்கள் இது போன்ற செலக்ஷன் DISABLE செய்துள்ளனர். வளர்ந்து வருபவர்கள் இந்த முறையை பின்பற்றாமல் இருப்பதே நலம்.
========================================================================
வலையுலக நண்பர்களே!
100 பதிவுகளாவது எழுத முடியமா? என்று சந்தேகத்துடன்தான் எழுதத் தொடங்கினேன்.இன்று 250 பதிவுகள் வரை எழுதி விட்டேன். பதிவுலகைப் பொறுத்தவரை இது குறைவான எண்ணிக்கையே!ஏராளமான பேர் அனாயாசமாக 300 , 400, 500 என்று எழுதி இருப்பதை காண முடிகிறது. என் தகுதிக்கு 250 அதிகம்தான் . பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் எனக்கும் ஆதரவு அளித்து விரைவில் 2 லட்சம் ஹிட்டுகளை வழங்க இருக்கின்ற அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
========================================================================
மிக்க நன்றி நண்பா...!
பதிலளிநீக்குநன்றி மனோ சார்!
நீக்குவெற்றிகரமான 250வது பதிவுக்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி வைகோ சார்!
நீக்குவெற்றிகரமான 250வது பதிவுக்கு மனமார்ந்தநல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி மதுரை தமிழன்
நீக்குநன்றிகள் பல...
பதிலளிநீக்கு250 வது பதிவு - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் சார்
நீக்கு250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! காபி பேஸ்ட் தடுப்பது பற்றி உங்க பதிவின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி!
பதிலளிநீக்குத.ம-2
நன்றி உஷா
நீக்குபகிர்வுக்கு நன்றி... 250 க்கு வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குநன்றி ஸ்கூல் பையன். வந்து சில நாட்கள் ஆகி விட்டது என்று நினைக்கறேன்.
நீக்குமுரளி,
பதிலளிநீக்குநீங்க சொன்ன ஜாவா ஸ்கிரிப்ட்லாம் வேலைக்காவது, ஜாவா ஸ்கிரிப்ட் டிஸேபில் செய்துவிட்டு காபி அடிக்கலாம் :-))
ஓபராவில் இன்னும் ஈசியாக ஆதர் மோட் என செலக்ட் செய்தால் காபி ஆகும் :-))
சிலப்பேர் புகைப்படங்களை ரைட் கிளிக் செய்து சேவ் செய்ய முடியாத போல செய்திருப்பார்கள், அப்பொழுது படத்தின் மீது கிளிக் செய்து , டெஸ்க்டாப்பில் காலியாக இருக்கும் இடத்தில் டிராக் அன்ட் டிராப் செய்தால் போதும் படம் கிடைத்துவிடும் :-))
இன்னும் நிறைய தில்லாலங்கடி வேலையெல்லாம் இருக்கு, எனக்கு அவ்வளவாக இதெல்லாம் தெரியாது.
காப்பி அடிக்க முடியாத வலைத்தளமே உருவாக்க முடியாது என்பது தான் உண்மை, எனவே அதைப்பற்றியெல்லாம் ரொம்ப அலட்டிக்காம போக கத்துக்கணும்!
உண்மைதான். காப்பி அடிக்கணும்னு நினைச்சா தடுக்க முடியாததுதான்.
நீக்குமுழு வலைப பக்கத்தையும் Ctrl+A கொடுத்து ஒரு Word File இல காப்பி செய்து விட்டு அதில் எது தேவையோ அதை மட்டும் வித்துதூஉ மேதிய்ல்லாம் டெலிட் செஞ்சா போதும். அப்புறம் அதை அப்படியே காப்பி பண்ணி வலையில போட்டுடலாம். காப்பி அடிக்கிறது பெரும்பாலும் சோம்பேறிகள்தான், இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு செய்யமட்டாங்க. இந்த ஜாவா ஸ்கிரிப்ட் நமக்கே தலைவலிதான். நீங்கல்லாம் முன்னாடியே இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டீங்க. என்னைப் போல இருக்கிறவங்க இப்பதானே தெரிஞ்சிக்குறோம். அதுல ஒரு சுவாரசியம் அவ்வளவுதான்.
250 - ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குCopy and Paste தொழில் நுட்பம் இருக்கும் வரை அவர்களை நாம் என்ன செய்ய முடியும்?
இதெல்லாம் இருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான் இதைவிட புத்திசாலிகள் காப்பி அடிப்பவர்கள்
நீக்குஉபயோகமான பதிவு.
பதிலளிநீக்குஆனால் தரவிறக்கியோ, அங்கு நுழைந்தோ பார்க்கும் பொறுமை நிறைய பேருக்கு இல்லை. வவ்வால் அவர்கள் சொல்வதுபடி காபி செய்ய நிறைய குறுக்கு வழிகள்! அப்பாதுரை ஒரு சமயம் சொன்னார் நிறைய தமிழ்ப் பதிவுகள் சிறு சிறு புத்தங்கங்கள் போல பிரிண்ட் செய்யப் பட்டு குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என்று!
250 வது பதிவுக்கு வாழ்த்துகள்.
இந்த செய்தி புதிதாக இருக்கிறது.
நீக்குதகவலுக்கு நன்றி
250 வது பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்கு250 வது பதிவை சிறப்பிக்கும் வகையில் கலக்கலாக ஒரு பதிவு எழுதியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு250 வது பதிவிற்கும் பயனுள்ள
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 5
பதிலளிநீக்கு250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
தகவலுக்கு நன்றி! வாழ்த்துக்கள் 250 பதிவுகளிட்டு பதிவுலகத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்திருப்பதற்கு!
பதிலளிநீக்குநல்ல தகவல்கள். இந்த நிரலையும் தவிர்த்து காபி செய்ய நிறைய வழிகள் உண்டு! இதைப் பற்றி கவலைப்படாது எழுதிக் கொண்டிருப்பதே மேல்.
பதிலளிநீக்கு250-வது பதிவிற்கு வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.
ilavasa menporulaga irunthal innum nanraga irukkum..250 vathu pathivukku vanakkangaludan koodiya vaazhthukkal..
பதிலளிநீக்கு250 --- பதிவிற்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார்....
பதிலளிநீக்கு250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன் பதிவுகளை காப்பி எடுக்க மாட்டார்கள் ! என்வழி, தனிவழி!
****புலவர் இராமாநுசம்June 2, 2013 at 7:26 PM
பதிலளிநீக்குஎன்வழி, தனிவழி! ***
:-)
உலக மகா எழுத்தாளர்னு நெனைப்போ உங்களுக்கு? உங்களோட பெரும்பாலான பதிவுகளும் பேஸ்ட்னு சொல்ல முடியாட்டியும் காப்பின்னு சொல்லலாம்.ஹமீதோட பல பதிவுகளை படித்தவன் நானு.உங்களை மாதிரித்தான் சில செய்திகள்ளேர்ந்து தன்னோட விமர்சனத்தையும் பார்வையும் சேர்த்து அவர் செய்திகளைத் தந்திருப்பார்.அதுக்கு நன்றியும் போட்டிருப்பார். அவரோட கவிதைகள்-கதைகள்லாம் பார்த்தா காப்பி மாதிரி தெரியல. ஒன்னு மட்டும் நிச்சயம். ரொம்பப் புதியவரான அவரது பதிவுகள் எல்லாமே ஹிட்டானதை ரொம்பக் காலமா குப்பை கொட்டுற உங்களைப் போன்ற பொறாமைக்காரர்களினால் தாங்கிக்க முடியல. அதான் உண்மை. இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்கலாமா...?
பதிலளிநீக்கு250 வது பதிவுக்கு வாழத்துக்கள் சகோ
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்
ம.தி.சுதா
இது என்னய்யா தில்லாலங்கடி வேலையா இருக்கு. சுஜாதா மனைவி உங்ககிட்ட வந்து பேட்டி குடுத்தாங்களா? எங்கேயோ பத்திரிகைல குடுத்த பேட்டிய வச்சு நாலு வரி சேர்த்துபுட்டா, அதெல்லாம் பதிவாய்டுமாய்யா...? நீங்க செஞ்சா அது சரி...இதையே அடுத்தவன் செஞ்சா அதுக்குப் பேரு காப்பி, பேஸ்ட்டாய்யா...?
பதிலளிநீக்குகதைகள்,கட்டுரைகள்,கவிதைகள், புதிர்கள் போன்ற புனைவுகளைத் தவிர மற்ற எல்லாமே ஒரு விதத்துல காப்பிதான்யா. செய்தியை,தகவல்களை புனைய முடியாதுய்யா..ஒன்றிலிருந்து இன்னொன்றாய் அது பரிணமிக்கும். விமர்சனங்களும் அப்படித்தான்யா.
தமிழ்மணத்தில உள்ள பதிவுகளில் புனைவுகளைத் தவிர மற்றவை எல்லாமே காப்பி ரகம்தான்யா. பலபேரு கட்டுரை எழுதுறோம்னு சொல்லி, மொழிமாற்றம் செய்துக்கிட்டு இருக்கானுவ. இன்னொரு ரகம், மதத்தை இழுத்து சண்டை புடிச்சிக்கிட்டிருக்கானுக.
ஒரு புதியவன் பிரபல்யமாவதையோ, ஓர் இஸ்லாமியன் முன்னுக்கு வருவதையோ இங்கேயுள்ள பெரும்பாலான பதிவர்கள் விரும்புவதில்லை என்பது நன்றாகவே தெரிகிறதய்யா.நல்லவனைக் கெட்டவனாகக் காட்டிக் கொடுப்பதோடு 'போட்டும் கொடுக்கும்' இந்த வக்கிரபுத்தி எப்போதுதான் ஒழியுமோ...?
ஹமீது நாளிதழ்களைப் பார்த்து காப்பி பேஸ்ட் பண்ணாருன்னு உங்களால நிரூபிக்க முடியுமா...? சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு வரலாமென்று போய்த் திரும்பினால், இங்கே நமக்கெதிராக மோசமான அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
ஒரு சவால்...ஏதாவது ஒரு தலைப்பில் நானும் நீங்களும் சிறுகதையோ, கவிதையோ, கட்டுரையோ எழுதிப் பார்க்கலாமா...அதனை ஒரு பொதுத் தளத்தில் தீர்ப்புக்கு விடுவோமா..?
பார்க்கலாமா, யார் வெற்றியாளர் என்று...?
அன்புடன்,
எஸ்.ஹமீத்
(முன்னாள் 'இதயத்தின் ஒலி' பதிவர் )
யாருப்பா இந்த காமெடியன் ஹமீத்??? தமிழ்மணத்திலிருந்து கழட்டிவிட்டா அட் லீஸ்ட் இவன் எழவைப் பார்க்காமல் இருக்கலாம்! ஒவ்வொரு பதிவிலும் ஒரே ஒளறலா இருக்கு! அடிச்சு வெரட்டுங்கப்பா!
நீக்கு